விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராடவில்லை. கதிர்காமத்துக்கு செல்வதற்கு தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. வடக்குக்கு சென்று ஜனாதிபதி இனவாதம் பேசக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.போராட்டத்தில்…
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ; மூடப்படும் வீதிகள் குறித்து அறிவித்தல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தர உள்ள நிலையில், அவரது விஜயத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க இன்று(ஏப்ரல் 2) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஏப்ரல் 4ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் ஆகிய வீதிகள் போக்குவரத்துக்காக பல சந்தர்ப்பங்களில் மூடப்படும்.
அன்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல உள்ள பயணிகள் மற்றும் ஏனையோர் முன்கூட்டியே மாற்று வீதிகளினூடாக தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அத்தோடு ஏப்ரல் 5ஆம் திகதி (சனிக்கிழமை) காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல – அபேகம வளாகம் ஆகிய பகுதிகளை அண்மித்த வீதிகள் பல சந்தர்ப்பங்களில் போக்குவரத்துக்காக மூடப்பட உள்ளது.
வீதிகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாரதிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக சாரதிகளை மாற்று வீதியினூடாக செல்ல வழி நடத்துமாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட உள்ள போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆதரவை வழங்குமாறு வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர் என்றார்.

