நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமையில் இருந்து, நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீள இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேளைத்திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (3) கலந்துரையாடவுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நடவடிக்கை காரியாலயத்தில் இன்று (3) மாலை 4.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகையில், நாட்டில் கடந்த காலங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போதெல்லாம், இருந்த அரசாங்கங்கள் அதுதொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டவுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைதுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து, உயிர் சேதங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது.
என்றாலும் இந்தமுறை ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பாதிப்பும் உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன. அதனால் கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவமுள்ள தலைவர் என்றவகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உடனடி நிவாரணங்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கிறது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களை மீள இயல்பு நிலைக்கு கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆராயவே இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என்றார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
Fogo777com - catching some buzz online. Is it the real deal? Looking for a new spot to play, and this might be it. Give it a try and tell me about it! Check it out: fogo777com
**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.