Categories: LocalPolitics

அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் – திலித் ஜயவீர

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை ‘வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டதாக அவர் குறிப்பிடும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக ஒரு துணிச்சலான பதிலை வழங்குவதற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வெனிசுவேலா நிலைவரம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு, வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை இறையாண்மை மற்றும் வெளிநாட்டுத் தலையீடு குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

gurueaswar

View Comments

  • Been messing around on b29bet for a bit now, and it's alright! A decent place to unwind after work. Nothing too fancy, but gets the job done with a simple interface. Give it a shot!. b29bet

Recent Posts

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…

2 weeks ago

1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…

2 weeks ago

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…

2 weeks ago

தனது முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…

3 weeks ago

Altair Issues Over 100+ Title Deeds Post Ownership Change

Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…

3 weeks ago