Categories: Local

அமெரிக்காவின் வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் – சஜித்

அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ரம்புக்கனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரியினை விதித்துள்ளார். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்குமென முன்னதாகவே நாம் அரசாங்கத்திற்கு அறியப்படுத்தினோம். 

அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்ற உளநல பிரச்சினை காரணமாகவே இது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 

தற்போது இந்த பிரச்சினையை ஆராய்வதற்குக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரொருவர் கூறுகின்றார். 

முன்னதாக நாம் கூறிய விடயத்திற்குச் செவிசாய்த்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தால் குறைந்தபட்சம் வரி வீதத்தையேனும் குறைத்திருக்கலாம். 

தற்போது இந்த வரி அறவிடப்படுமானால் நாட்டில் பொருளாதார பேரழிவு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Doneproduction

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

2 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

3 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

4 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

4 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

4 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago