Categories: Local

அம்பலாந்தோட்டை முக்கொலை சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை, எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர்.

அதன்படி, சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, ​​பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாந்தோட்டை, மாமாடல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Doneproduction

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

2 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

3 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

4 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

4 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

4 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago