Categories: WORLD

அறிவியல் + அரசியல் – பூமிக்கு திரும்பும் சுனிதா மற்றும் வில்மோர்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 5ம் திகதி BOEING “starliner” விண்வெளிக்கு ஏவப்பட்டது. அடுத்த தினமான 6ம் திகதி “STARLINER” விண்வெளி நிலையத்தோடு தொடர்புபட்டது, 2024 ஜூன் 18ம் திகதி “STARLINER” பூமிக்கி திரும்பியிருக்கவேண்டும் ஆனால் “NASA ” ஆகஸ்ட் மாதம் வரை அந்த பயணத்தை தாமதப்படுத்தியது,

பின் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, “STARLINER” மற்றும் “SPACEX” ஆகிய இரண்டு விண்கலங்களில் எதாவது ஒன்றின் மூலமாக விண்வெளி வீரர்களை பூமிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக நாசா அறிவித்திருந்தது.

அந்தவகையில் நாசா 24.08.2024 அன்று விண்வெளி வீரர்களை “SPACEX” மூலமே பூமிக்கு கொண்டவரப்போவதாக அறிவித்தார்கள். அதன் பின் நீண்ட இடைவேளை…காரணம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர்தேர்வுத் தேர்தலும்(2024.11.05), பெரும்பான்மை ஆதரவோடு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதும். பல சட்டங்களில் உடலை மாற்றங்களை டிரம்ப் கொண்டுவந்ததும். இவை நிலைக்கு வந்தபின் 2025.02.11ம் திகதி “நாசா” அறிவித்தத்து “SPECEX”ன் DRAGON CAPSULE மூலமாக சுனிதா மற்றும் குழுவினர் பூமியை அடைவார்கள் என்று.

அதன்படி நேற்று (மார்ச் 15) நாசாவின் ஆன் மெக்லைன் மற்றும் நிக்கோல் அயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி, ரஷ்யாவின் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் “SPECEX”ன் DRAGON CAPSULE மூலமாக விண்வெளிக்கு பயணப்பட்டு இன்று(மார்ச் 16) விண்வெளி நிலையத்தோடு இணைந்து கொண்டனர். இவர்களிடம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் அங்கே பார்த்துக்கொண்டிருக்கும் திட்டத்தை முறையாக கையளித்துவிட்டு அடுத்த வாரம் பூமிக்கு வந்து சேர்வார்கள்.

இந்த நிகழ்வு அறிவியல் + அரசியல் பின்னணியில் வர்த்தக வணிக போராட்டத்தை ஏற்படுத்த முனைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

சுனிதா மற்றும் வில்மோர் பூமிக்குத்திரும்புவது கட்டாயமானது, இதில் போயிங் விண்கலத்தில் இருந்து SPECEX விண்கலம் மாற்றப்பட்டதன் பின்னணி இயந்திரக்கோளாறு என்று கூறினாலும் இதன் பின்னணியில் பெரும் அரசியல் பிணைவு இருப்பதாகவே புத்திஜீவிகள் கூறுகின்றனர்.

இந்த மாற்றத்தால் SPECEX இந்த வளர்ச்சியும், போயிங்-இன் வீழ்ச்சியும் பாரிய மாற்றத்தை உலகளாவிய ரீதியில் கொண்டுவரப்போகின்றன.

கொரோனா காலத்தில் போயிங் நிறுவனம் ஆட்குறைப்பு செய்ததுமுதல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அவர்கள் மேற்கொண்ட உற்பத்தியில் தரப்பிரச்சனை அடுத்தடுத்து பதிவாகியது.

இந்த வாய்ப்பை மிக இலாபகமாக எலன் பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

இதுதொடர்பாக எலன் கூறுகையில் சுனிதா மற்றும் வில்மோர் முன்னதாகவே பூமிக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி அதற்க்கான அனுமதியினை தரவில்லை என்றார்.

எது எப்படியோ 9 மாதங்கள் கழித்து பல எதிர்வுகூறல்களை தாண்டி, சில கற்பனைகளை தவிடுபொடியாக்கி சுனிதா மற்றும் வில்மோர் குழுவினர் இன்னும் சில நாட்களில் பூமியை வந்தடைந்து விடுவார்கள் என்பது நிச்சயம்

– HAMSI MARLON –

7 News Pulse

Recent Posts

M One: Pioneering Integrated Marketing and Brand Experiences

Since its inception in 2008, M One has transformed from a BTL-focused agency into a…

8 hours ago

ALFT Empowers Sri Lanka’s Leading Consumer Brands with Industry-first Packaging Masterclass

17th March 2025: ALFT Packaging, Sri Lanka’s pioneer in Flexible packaging, successfully concluded an exclusive…

8 hours ago

WNS Strengthens Commitment to Sri Lanka with Orion City Expansion

WNS Global Services, a leading provider of Business Process Management (BPM) solutions, announced that it…

8 hours ago

Serendib Flour Mills recognizes top performers and unveils strategic vision at Annual Sales Conference 2025

Serendib Flour Mills (SFML), a leader in Sri Lanka's food manufacturing sector committed to nourishing…

8 hours ago

E.B. Creasy Solar Unveils SUNGROW Service Center to Enhance Customer Experience

E.B. Creasy Solar, the renewable energy arm of E.B. Creasy & Co PLC, celebrated the…

8 hours ago

Delmege Partners with Hettich to Introduce a full range of hardware solutions

Delmege, a leading conglomerate with a legacy of 175 years and known for its diversified…

8 hours ago