Categories: Local

இன்றைய வானிலை அறிக்கை (14 12 2025)

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

7 News Pulse

View Comments

  • 56dcom is quite a simple site. Does the job, but I wouldn't write home about it. If you are looking for a no frills site, this might be for you. Check it out here: 56dcom

Recent Posts

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…

2 weeks ago

1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…

2 weeks ago

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…

2 weeks ago

தனது முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…

3 weeks ago

Altair Issues Over 100+ Title Deeds Post Ownership Change

Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…

3 weeks ago