கூகிள் வாலட் (Google Wallet) அறிமுகத்தின் ஒரு பகுதியாக, கூகிள் பே (Google Pay) சேவையை தனது அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, இலங்கையில் கூகிள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் கொடுப்பனவுத் தலைவரான விசா ஆகியவற்றுடன் இணைந்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை Commercial Bank of Ceylon PLC பெற்றுள்ளது. இது இலங்கையின் நிதி நிலப்பரப்பில் ஒரு திருப்புமுனையாகும், பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறது.
இலங்கைச் சந்தையில் Commercial Bank மட்டுமே தனது விசா அட்டைதாரர்களுக்கு கூகிள் பே-ஐ செயல்படுத்துகிறது, இந்த உலகத் தரம் வாய்ந்த மொபைல் கட்டணத் தீர்வினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு முதல் நகர்வின் (first-mover) நன்மையை வழங்குகிறது.
Commercial Bank-இன் விசா டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைதாரர்கள் இப்போது தங்கள் அட்டைகளை கூகிள் வாலட்-இல் எளிதாகச் சேர்க்கலாம், ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது அழைப்பு மையம் மூலமான சரிபார்ப்பு மூலம் அங்கீகரிக்கலாம். மேலும், விசா ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளூரிலும் உலகளவிலும் எந்தவொரு தொடுதலில்லா (contactless) பிஓஎஸ் (Point-of-Sale) முனையத்திலும் ஒரு எளிய தட்டுதல் (tap) மூலம் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான, தொடுதலில்லா கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.
Commercial Bank-இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்க, “விசா மற்றும் கூகிளுடன் இணைந்து செயல்படுவது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவு அனுபவங்களை மேம்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த கூட்டாண்மை, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் பணமற்ற எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான விசா நாட்டின் முகாமையாளர் திருமதி. அவந்தி கொலம்பகே, “கூகிள் பே-இன் மாற்றத்தக்க கொடுப்பனவு அனுபவத்தை இலங்கைக்கு கொண்டு வர Commercial Bank of Ceylon மற்றும் கூகிள் உடன் இணைந்து பணியாற்றுவதில் விசா மகிழ்ச்சியடைகிறது. இது ஒரு ஸ்மார்ட்போன் மூலம் வேகமான, அதிக வசதியான மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவு அனுபவத்தை அனுபவிக்க நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…
கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…
SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…
Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…
Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…