Categories: Local

இலங்கையின் சனத்தொகை பரம்பலில் முதலிடம் மேல்மாகாணம்..!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று ( ஏப்ரல் 07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பின் படி , இலங்கையின் மொத்த சனத் தொகை இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.

இவ் 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2025 பெப்ரவரி மதத்தின் இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது.

இருப்பினும் நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது.

சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது.

மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டம் 2,433,685 பேருடன் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 2,374,461 பேருடன் கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது.

கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.

அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது.
ஆனால் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு – 122,542, மன்னார் -123,674, கிளிநொச்சி – 136,434 மற்றும் வவுனியா – 172,257 என மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன. அதாவது முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் தான் வசிக்கின்றார்கள்.

7 News Pulse

Recent Posts

Dharmaraja Clinch Third Consecutive Under-14 Hockey Title

The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…

3 days ago

“Every Child Can” – CAL Children Triumph at Iron Kids Colombo 2026

As Child Action Lanka (CAL) marks its 20th Anniversary under the theme “Every Child Can,”…

3 days ago

Why Natural Ceramides Are Becoming Essential in Baby Skincare

The instinct to protect your baby begins with the smallest rituals. A warm bath. A…

3 days ago

Synogen Launches Sri Lanka’s First Comprehensive EV Charging Hub at Independence Arcade

Colombo, Sri Lanka – (25th Feb 2026) – In a landmark moment for Sri Lanka’s…

3 days ago

Altair Showrooms: Strategically Chosen by the World’s Leading Automotive Brands

Altair’s prominence on Colombo’s skyline is now mirrored at street level. A growing number of…

4 days ago

Siyapatha Finance Continues Mission to Conserve Sri PadaReserve

In an effort towards the sustainable conservation and preservation of Sri Pada Reserve, one of…

4 days ago