Categories: Business

இலங்கையின் தொழில்முனைவோர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக Startup Nation திட்டத்தை ஆரம்பிக்கும் Hatch

இலங்கையின் முன்னணி வணிக தொடக்கங்களின் சூழல் கட்டமைப்பான Hatch நிறுவனம், நாட்டின் தொழில்முனைவோர் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான புரட்சிகரமான முயற்சியான Startup Nation திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 18 தொடக்க வணிகங்கள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்நிறுவனம் 700 இற்கும் அதிக வணிக தொடக்கங்கள் மற்றும் மேலும் 800 வெற்றிடங்களை கொண்ட Hatch, இன்று 3,000 வெற்றிடங்களைக் கொண்டதாக வளர்ந்து, இலங்கை தொழில்முனைவோரின் தூணாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

Startup Nation திட்டமானது, நாட்டின் சிறந்த வணிக தொடக்கங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டமைத்து, நிதியளிப்பது தொடர்பில் அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ், Hatch ஒரு தேசிய வணிக தொடக்க போட்டியை நடத்தவுள்ளது. இதில் 1,000 இற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களில் முதல் 100 இடங்களைப் பெறுவோர் பட்டியலிடப்படுவார்கள். இந்தப் போட்டியில் சிறந்த தொழில்நுட்ப தீர்வுகள், B2B மற்றும் B2C புத்தாக்க கண்டுபிடிப்புகள், நிறுவனங்களுக்கான மென்பொருள்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் அளவிடக்கூடிய திறனைக் கொண்ட தேசிய ரீதியிலான முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வணிக தொடக்கங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வெற்றிகரமான MPV வருமானம் ஈட்டக் கூடிய வணிக தொடக்கமொன்று வெளிப்படும் நிலையில், அந்த சிறந்த முயற்சியானது, 100,000 அமெரிக்க டொலர் நிதியுதவி வாய்ப்பைப் பெறுவதற்கு தகுதி பெறும். அத்துடன் தொடர்ச்சியாக முதலீடுகளை பெறுவவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், MPV வருமானம் ஈட்டும் வணிகங்களை Hatch அதன் இலக்காகக் கொண்டிருக்கும்.

தமது ஆரம்ப நிலையிலிருந்தே இலங்கை தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து, ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவுவதற்கு Hatch செயற்பட்டு வருகிறது. Startup Nation திட்டமானது, முதலீட்டாளர்களுக்கும் வணிக தொடக்கங்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம், புத்தாக்கங்களைத் தூண்டி, நிலைபேறான நீண்டகால தீர்வுகளை வழங்கும்.

Hatch நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜீவன் ஞானம் இது பற்றித் தெரிவிக்கையில், “மூலதனத்தை வழங்கி, உலகளாவிய ரீதியில் தமது வெளிப்பாட்டை காண்பிப்பதற்கு அவசியமான வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் வணிக தொடக்கங்களின் வளர்ச்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம், உலகளாவிய வணிக தொடக்கங்களின் கட்டமைப்பில் இலங்கையை சிறந்த செயல்திறன் கொண்ட பங்களிப்பாளராக மாற்ற நாம் செயற்படுகிறோம்.” என்றார்.

உள்நாட்டில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியல் அளவிடக்கூடிய நிலைபேறான தீர்வுகளை உருவாக்க அதிக வணிக தொடக்கங்களை ஊக்குவிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் பசுமை வலுசக்தி முதல் புதிய தொழில்நுட்பம் மற்றும் சமூக நிறுவனங்கள் வரை, Hatch மூலம் அடைகாக்கப்பட்ட வணிக தொடக்கங்கள் யாவும் சவாலான தொழில்துறைகளாகும். அதே நேரத்தில் அவை மிகவும் வலுவான மற்றும் உள்ளீர்க்கப்பட்ட பொருளாதாரத்தை செயற்படுத்துகின்றன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), Bill & Melinda Gates Foundation, Ford Foundation, US State Department, Global Affairs Canada, GIZ (German Development Agency) மற்றும் Nestlé, IFS Global, Hemas PLC, Veracity Group போன்ற முக்கிய நிறுவனங்களுடனான அதன் பலம் வாய்ந்த கூட்டாண்மைகள் மூலம் வணிக தொடக்க திட்டங்களின் நம்பகத்தன்மை மேலும் ஆதரிக்கப்படுகிறது. Hatch இணை நிறுவுனர் பிருந்தா செல்வதுரை ஞானம் கருத்து வெளியிடுகையில், “அருகில் வந்து, சர்வதேச கூட்டாண்மைகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள திறனானது, இலங்கை வணிக தொடக்க கட்டமைப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான எமது உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. Startup Nation திட்டமானது உள்ளூர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும்

Dilhan Fernando, Chairman of Hatch
Jeevan Gnanam, Co-founder of Hatch
7 News Pulse

Recent Posts

பேபிசெரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி

இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…

2 days ago

Autodesk Strengthens Commitment to Driving Innovation and Sustainability in Sri Lanka’s Construction Sector

Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…

2 days ago

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…

3 days ago

Nyne Hotels Immerses Travel Agents in Boutique Luxury Experience

Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…

3 days ago

Sri Lanka welcomes ‘Hello, to More’ as GWM and David Pieris Automobiles announce strategic partnership

Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…

3 days ago