Clogard FDI
2025 ஜூன் 05 – கொழும்பு: Hemas Consumer Brands நிறுவனத்தின் நம்பகமான வாய்ச் சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) 25 ஆண்டுகளுக்கும் மேலான அங்கீகாரத்தை பெற்று விளங்குகின்றது. இந்த நீண்ட கால ஒத்துழைப்பு, இலங்கையர்களின் வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் குளோகார்டின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. உயர் தரத்துடன், புளோரைட் சேர்க்கப்பட்ட வாய்ச் சுகாதாரத் தயாரிப்புகளை வழங்கும் க்ளோகார்ட், தேசிய அளவிலும், உலகளாவிய ரீதியிலுமான உரிய தரநிலைகளை பின்பற்றுகிறது என்பதற்கான சான்றாகவும் இது அமைகின்றது.
இலங்கையில் SLDA இனால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைட் கொண்ட ஒரு சில பற்பசை வர்த்தகநாமங்களில் ஒன்றான க்ளோகார்ட், நாட்டின் வாய்ச் சுகாதார இலக்குகளை அடைய முக்கிய பங்காற்றி வருகிறது.
2015-2016 காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய வாய்ச் சுகாதார ஆய்வின் படி, 35 முதல் 44 வயதுக்குட்பட்ட வயது வந்த இலங்கையர்களில் 64% ஆனோர் பற்குழிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலானது, இந்தத் துறையில் விழிப்புணர்வூட்டும் தேவையையும், பயனுள்ள தயாரிப்புகளுக்கு ஏற்பட்டுள்ள கேள்வி மிக அதிகமாக இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
கடந்த ஒரு தசாப்த காலமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைள சென்றடைந்து செயற்பட்டு வரும் Mobile Dental Clinic திட்டம் மூலம் பல்வேறு பாடசாலைகளில் முன்னெடுக்கும் Dental Clinic திட்டங்கள் வாயிலாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஆர்வமூட்டும் செயற்பாட்டு ரீதியிலான முறைகளில் க்ளோகார்ட் வழங்கி வருகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலான சந்தை அனுபவத்துடன், பொதுமக்களின் மாறி வரும் வாய்ச் சுகாதாரத் தேவைகளை புரிந்து கொண்ட ஒரு வர்த்தகநாமமாக க்ளோகார்ட் வளர்ந்துள்ளது. இவ்வர்த்தகநாமம் பற்பசை, பல் தூரிகைகள், மவுத் வொஷ், சிறுவர் உபயோகத்திற்கான பிரத்தியேகமான தயாரிப்புகள் என பரந்த தயாரிப்பு வரிசைகளை உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்த அனைத்து தயாரிப்புகளும் இலங்கையின் இயற்கை மூலிகைகள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் சேர்க்கையுடன் உருவாக்கப்பட்டவையாகும். உலக பல் மருத்துவ சங்கத்தின் (FDI) உறுப்பினரான SLDA இன் அங்கீகாரமானது, பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, குளோகார்ட் வர்த்தகநாமத்தை ஒரு வாய்ச் சுகாதார நிபுணராக உயரத்திற்கு கொண்டு செல்கிறது.
Hemas Consumer Brands நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சியான் ஜயவீர இது குறித்து தெரிவிக்கையில்: “வாய்ச் சுகாதாரத்தில் ஒரு தேசிய நிபுணர் எனும் வகையில் க்ளோகார்ட் எப்போதும் பெருமிதம் கொள்கிறது. SLDA உடனான பங்காளித்துவம் ஊடாக, தரமான வாய்ச் சுகாதார தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ச்சியாக நாம் ஈடுபடுகிறோம். உலக பல் சங்கம் போன்ற ஒரு உலகளாவிய அமைப்பின் அங்கீகாரமானது, எமது முயற்சிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகும். இலங்கையின் பாரம்பரிய வர்த்தகநாமமாக விளங்குவதற்கும் அப்பால், உலக பல் சுகாதார தரநிலைகளுக்கு ஏற்ப புதிய சவால்களையும், நுகர்வோர் எதிர்பார்ப்புகளையும் சந்திக்க தயார் நிலையில் க்ளோகார்ட் செயற்பட்டு வருகிறது.” என்றார்.
உலக பல் சங்கத்தால் (FDI) அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பற்பசை வர்த்தகநாமமாக திகழ்கின்றது. தேசிய சுகாதார முன்னுரிமைகளுக்கு இணங்கி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைந்த செயற்பாடுகளை பின்பற்றி, பாதுகாப்பான, பயனுள்ள வாய்ச் சுகாதார தயாரிப்புகளை இலங்கையர்களுக்கு வழங்குவது தொடர்பான தனது வாக்குறுதியை க்ளோகார்ட் உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது.
இலங்கையின் குறைந்துவரும் உயிரியல் பரம்பல் மற்றும் நீரின் தரம் வீழ்ச்சியடைவதற்கு ஜப்பான் ஜபர (Water hyacinth) தாவரங்கள் பாரிய அச்சுறுத்தலாக…
Janashakthi Life, a leading name in the insurance industry and a subsidiary of JXG (Janashakthi…
TVS Lanka sponsored the much-coveted Player of the Series title at the recently concluded Maliban…
Colombo, Sri Lanka – Prime Lands Residencies PLC has secured the historic Otters Club Car…
First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a leading investment institution…
Fracspace நிறுவனம் தனது மைல்கல் திட்டமான 'Altaira' எனும், மலைப்பகுதியில் அமைந்த, அதிசொகுசு குடியிருப்புத் திட்டத்தை 2026 பெப்ரவரி 14ஆம்…
View Comments
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?