Categories: Business

இலங்கையில் முதன்முறையாக BYD மற்றும் DENZA வாகனங்களுக்கான பிரத்தியேக காட்சியறை கொழும்பு Altair-இல் திறப்பு

இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, தனது புதிய ‘அல்டேர்’ (Altair) காட்சியறையை கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் சூழல்நேய மற்றும் நிலைபேறான போக்குவரத்து நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கொழும்பு அல்டேர் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்தக் காட்சியறையானது, BYD மற்றும் DENZA ஆகிய இருவகை வாகனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்ட இலங்கையின் முதலாவது பிரத்தியேக காட்சியறையாகும். அத்துடன், இங்கு வாகனங்களைப் பார்வையிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தர மற்றும் சொகுசான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இங்கு ஓர் உள்ளக சிற்றுண்டிச்சாலையும் (In-house café) அமைக்கப்பட்டுள்ளது.

இக்காட்சியறையில் BYD SEALION 6 மற்றும் BYD SHARK 6 உள்ளிட்ட அனைத்து உயர்ரக புதிய சக்தி வாகனங்களும், DENZA-வின் சொகுசு ரக வாகனங்களான DENZA B5 மற்றும் DENZA B8 ஆகியவையும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இரு வர்த்தக நாமங்களினதும் அதிநவீன ஹைப்ரிட் மற்றும் மின்சாரத் தொழில்நுட்பத் திறனைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வாகனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஓராண்டிற்குள் திறக்கப்படும் BYD-இன் 9 ஆவது மற்றும் DENZA-வின் 2 ஆவது காட்சியறை இதுவாகும். இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பை மேலும் வலுப்படுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வானது, அடுத்த தலைமுறை புதிய சக்தி வாகன போக்குவரத்து குறித்து இலங்கையர்களிடையே விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு விரிவான தொழில்நுட்ப முயற்சியின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த புகை வெளியேற்றம் ஆகியவற்றில் வாடிக்கையாளரிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் வீதி நிலைமைகளுக்குப் பொருத்தமான BYD மற்றும் DENZA-வின் மேம்பட்ட ‘DM சுப்பர் ஹைப்ரிட்’ (DM Super Hybrid) மற்றும் ‘பிளெக்-இன் ஹைபிரிட்’ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒரு விரிவான விழிப்புணர்வு முன்னெடுப்பையும் இந்நிறுவனம் இத்துடன் ஆரம்பித்துள்ளது.

அல்டேர் காட்சியறைத் திறப்பு விழாவில் உரையாற்றிய ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன தெரிவிக்கையில், “எமது விற்பனை வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், எமது சுப்பர் ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் அதன் பரந்த DM-i தளம் குறித்த விழிப்புணர்வையும், புரிதலையும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். பல இலங்கை சாரதிகளைப் பொறுத்தவரை, புதிய சக்தி வாகனங்களுக்கான மாற்றம் என்பது வாகனங்களை அணுகுவதைப் போலவே, அவற்றின் மீதான நம்பிக்கையைப் பெறுவதையும் சார்ந்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப ரீதியான செயற்திட்டத்தின் மூலம், மின்சார-முன்னிலை (Electric-first) செயல்திறனானது நீண்ட தூரப் பயணங்கள் குறித்த அச்சத்தை எவ்வாறு போக்குகின்றது என்பதையும், இந்த வாகனங்கள் இலங்கையின் வீதி நிலைகளுக்கு எவ்வளவு பொருத்தமானவை என்பதையும் நிரூபிப்பதே எமது நோக்கமாகும்.” என்றார்.

அதற்கமைய, இந்த அறிமுக விழாவில் BYD மற்றும் DENZA வாகனங்களை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் மூன்று முக்கிய புத்தாக்க கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘DM-i சுப்பர் ஹைப்ரிட்’ தொழில்நுட்பம் என்பது மக்கள் உண்மையில் வாகனம் ஓட்டும் முறையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட, மின்சாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பிளக்-இன் ஹைப்ரிட் (plug-in hybrid) அமைப்பாகும். அதாவது, தினசரி பயணங்களுக்கு பேட்டரி சக்தியை முதன்மையாகப் பயன்படுத்துவதுடன், நீண்ட தூரப் பயணங்களின் போது எஞ்சின் எவ்விதத் தடையுமின்றி தானாகவே இயங்கத் தொடங்கும். இது 70 கிலோமீற்றர் வரை முழுமையான மின்சாரப் பயணத் தூரத்தையும், 1,000 கிலோமீற்றருக்கும் அதிகமான ஒருங்கிணைந்த பயணத் தூரத்தையும் வழங்குகின்றது. நடைமுறையில் பார்த்தால், பெரும்பாலான அன்றாடப் பயணங்களை பேட்டரியின் மூலமே நிறைவு செய்ய முடியும் என்பதால், வாகனச் செயல்திறனில் எந்தக் குறைவும் இன்றி எரிபொருள் செலவை பெருமளவில் குறைக்க முடிகிறது.

பிளேட் பேட்டரி (Blade Battery) என்பது மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான உலகின் பாதுகாப்பான பேட்டரிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது BYD நிறுவனத்தின் ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனக் கட்டமைப்புகளின் அடிப்படையாக அமைகிறது. இதன் புரட்சிகரமான cell-to-pack வடிவமைப்பு, வழக்கமான பேட்டரி தொகுதிகளை தவிர்த்து, இடவசதியை அதிகப்படுத்துவதுடன் சிறந்த கட்டமைப்பு உறுதி, வெப்ப முகாமைத்துவம் மற்றும் நீண்ட ஆயுட்காலத்தையும் வழங்குகிறது. இது வாகன ஓட்டுநர்களுக்குத் தங்களது வாகனத்தின் மீது நீண்டகால நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

DENZA B5 மற்றும் B8 மாதிரிகளுக்கு வலுவூட்டும் DENZA-வின் DMO Off-Road Platform என்பது கரடுமுரடான பாதைகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இரட்டை மோட்டார் (Dual-motor) அமைப்பாகும். இதன் Intelligent torque distribution முறையானது, எந்தவொரு நிலப்பரப்பிலும் தேவைப்படும் இடத்திற்குத் துல்லியமாக ஆற்றலை வழங்குகின்றது. ஒரு நவீன மின்மயமாக்கப்பட்ட வாகனத்திற்குரிய உயர் செயல்திறன் மற்றும் நேர்த்தியில் எவ்வித சமரசமும் இன்றி, சவாலான பாதைகளில் தடையின்றி பயணிக்கும் ஆற்றலை இத்தொழில்நுட்பம் வழங்குகின்றது.

அல்டேர் காட்சியறையின் திறப்பு விழாவானது, இலங்கையின் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பின் அடுத்த கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. BYD மற்றும் DENZA ஆகிய வர்த்தக நாமங்கள் நாடு முழுவதும் தங்களது கால்தடத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களைச் சந்தைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் வேளையில், இலங்கையில் புதிய சக்தி வாகனங்களின் அர்த்தமுள்ள மற்றும் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் மக்களிடையே கட்டியெழுப்புவதில் இந்நிறுவனம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது.

7 News Pulse

Recent Posts

Altair Showrooms: Strategically Chosen by the World’s Leading Automotive Brands

Altair’s prominence on Colombo’s skyline is now mirrored at street level. A growing number of…

7 hours ago

Siyapatha Finance Continues Mission to Conserve Sri PadaReserve

In an effort towards the sustainable conservation and preservation of Sri Pada Reserve, one of…

8 hours ago

HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

இலங்கையின் தனியார்துறை வங்கியியல்துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரணவீதி, பண்டாரகம…

8 hours ago

Seylan Bank reports record Profit after Tax (PAT) of LKR 12.1 Bn in 2025

Profit before Income Tax - LKR 19.6 Bn up by 22.3% Profit after Tax –…

8 hours ago

செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உலகளாவிய ISO 22301 தரச்சான்றிதழைப் பெற்ற HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System)…

8 hours ago

Prime மற்றும் Melwa இணைந்து Port City Colombo இல் 4 ஏக்கர் உயர்தரகாணியை அமெ.டொ. 57.6 மில். பெறுமதியில் கையகப்படுத்தியுள்ளது.

Prime மற்றும் Melwa குழுமங்கள், இலங்கையின் இரு பெரும் வர்த்தக ஜாம்பவான்கள் இணைந்து, நாட்டின் மிகவும் தொலைநோக்குடைய நகர்ப்புற அபிவிருத்தி…

8 hours ago