உயர்தர PV மற்றும் ஆற்றல் சேமிப்பு தீர்வுகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமான Trinasolar, இலங்கையின் முன்னணி சோலார் விநியோகஸ்தரான Solaris Energy (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டது. நாடு முழுவதும் அதிகபட்சமாக 25 மெகாவாட் சூரிய தொகுதிகளை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்துறை கண்காட்சியான SNEC 2025 ஷாங்காயில் நடைபெற்றபோது இந்த ஒப்பந்தத்திற்கு உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Trinasolar Asia Pacific நிறுவனத்தின் தலைவர் Todd Li மற்றும் Solaris Energyஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. டி. திரியம்பகம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் பங்கேற்றனர்.
இந்த மூலோபாய கூட்டு ஒத்துழைப்பின் கீழ், தெற்காசிய வணிக சந்தைக்கான Trinasolarஇன் அர்ப்பணிப்பு நன்கு பிரதிபலிக்கிறது. மேலும், சுத்தமான மற்றும் நிலையான ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதை துரிதப்படுத்துவதற்கான தேசிய இலக்குகளை அடைவதற்கும் இந்த கூட்டு ஒப்பந்தம் ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி, Trinasolar நிறுவனம் இலங்கையின் பயன்பாட்டு அளவிலான சூரிய திட்டங்களுக்கு தனது துணை ஒப்பந்ததாரராக Solaris Energy நிறுவனத்தை நியமிக்கும்.
Trinasolar Asia Pacific நிறுவனத்தின் தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் குழு பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், Solaris energy உடன் இந்த கூட்டு ஒத்துழைப்பு இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எதிர்காலத்திற்கான நீண்டகால அர்ப்பணிப்பின் முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: “எங்கள் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் Vertex N மாதிரி தொழில்நுட்பத்தை Solarisஇன் வலுவான உள்நாட்டு நிலப்பரப்புடன் இணைப்பதன் மூலம், சுத்தமான ஆற்றல் இலக்குகளை அடைவதற்கு உதவும் நம்பகமான மற்றும் உயர் திறன் கொண்ட சோலார் உட்கட்டமைப்பை வழங்க எங்களால் முடியும். மேலும், இது நிலையான வளர்ச்சியை துரிதப்படுத்தவும், உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையை சக்திவாய்ந்ததாக மாற்றவும் எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
இந்த கூட்டு ஒத்துழைப்பின் முக்கிய காரணி, Trinasolar இன் Vertex N தொடர் தயாரிப்புகளாகும், இதில் n-type i-TOPCon Cell தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. உயர் செயல்திறன், சிறந்த வெப்பநிலை செயல்திறன் மற்றும் குறைந்த ஆற்றல் விலை ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த Trinasolarஇன் Vertex N தொடர், இலங்கையின் வெப்பமண்டல காலநிலை மற்றும் தேசிய வலைப்பின்னல் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
Solaris Energy (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. டி. திரியம்பகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Trinasolar உடன் இணைவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையின் பயன்பாட்டு அளவிலான திட்டங்களுக்கு உயர்தர சோலார் தீர்வுகளை வழங்க இந்த கூட்டணி முக்கியமானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் ஆற்றல் திறனை மேம்படுத்துவதற்கான எதிர்கால அடித்தளத்தை அமைப்பதில் ஒரு முன்னணி படியாகும். உலகளாவிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்கங்களை உள்நாட்டு நிபுணத்துவத்துடன் இணைத்து, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை இலங்கைக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.” என்று குறிப்பிட்டார்.
Trinasolar, உலகளாவிய அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதும் உயர்தர சோலார் தொழில்நுட்பங்களுக்கான அணுகலை இலங்கையர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கும். குறிப்பாக நம்பகமான உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இலங்கையின் ஆற்றல் எதிர்காலத்தை வலுப்படுத்தும் முக்கிய பணியை ஏற்க Trinasolar எதிர்பார்க்கிறது. புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த தங்களது அர்ப்பணிப்புடன், உயர் செயல்திறன் கொண்ட நிறுவனமாக ஏற்கப்பட்ட Trinasolar, நம்பகமான சூரிய ஆற்றல் தீர்வுகளை வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its…
Shop, Win, and Create Memories That Last – Including an iPhone 17 Pro Giveaway! 26…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும்…
களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச்…
இலங்கையின் பிரபல கானா பாடகர் "நவகம்புர கணேஷ்" உடல்நலக்குறைவால் இன்று(29 11 2025) மாலை காலமானார். தன்னுடைய உத்வேகமான குரலாலும்,…
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். டிட்வா…