விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம்
இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் BYD நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் புதிய வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள், BYD நிறுவனம் விரைவான வளர்ச்சியுடன் சந்தையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, புதிய வாகன (Brand-new) மற்றும் மின்சார வாகன (EV) சந்தைகளில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது. இவற்றில் SEALION 6 மாதிரி, SUV ரக வாகனப் பிரிவில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கைச் சந்தையில் BYD அறிமுகப்படுத்தும் நவீன ரக வாகனங்கள் மற்றும் நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டு வரும் அதன் விற்பனை வலையமைப்பு (Retail network) ஆகியவையே இந்த அபார வெற்றிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
இதுதொடர்பாக John Keells CG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் BYD வாகனங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. புதிய வாகன சந்தையில் BYD முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் சிறப்பான சேவை அனுபவத்தை வழங்குவதற்காக விற்பனைக்குப் பின்னரான சேவை வசதிகளையும் விரைவாக மேம்படுத்தி வருகிறோம். இந்த முதலீடுகள் மூலம் சேவை வசதிகளை கணிசமாக விரிவுபடுத்தவும், சேவையின் தரத்தை நிலையானதாக பேணவும், வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தடையற்ற உதவியை வழங்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்பட்ட கடந்த ஒன்பது மாதங்களில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மொத்த புதிய வாகனங்களில 37 சதவீதத்தையும், மின்சார வாகன பதிவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும் BYD நிறுவனம் தனதாக்கியுள்ளது. இது பல்வேறு வாகன வகைகள் மற்றும் பயன்பாட்டு தேவைகளில் BYD-க்கு கிடைத்து வரும் தொடர்ச்சியான வரவேற்பை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையில் எட்டப்பட்டுள்ள இந்த மைல்கல் சாதனை, புதிய சக்தி வாகனங்களில் (NEVs) BYD நிறுவனம் கொண்டுள்ள உலகளாவிய ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது. 2025ஆம் ஆண்டில் உலகளவில் 4,602,436 வாகனங்களை விற்பனை செய்து, இப்பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்கல மின்சார வாகன (Battery Electric Vehicles) விற்பனையாளராகவும் உருவெடுத்துள்ளது. இது அதன் முழுமையான மின்சார வாகன தயாரிப்பு வரிசையில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
இக்காலப்பகுதியில் வாகன விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து, John Keells CG Auto நிறுவனத்தின் கீழ் இயங்கும் BYD நிறுவனம், தனது உள்ளூர் செயல்பாடுகளைப் படிப்படியாக விரிவுபடுத்தியது. அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு கட்டங்களாகப் புதிய வாகன மாதிரிகளையும், காட்சியறைகளையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ATTO 3, DOLPHIN, M6, SEAL, SEALION 6, SHARK 6, SEALION 5, ATTO 1 மற்றும் ATTO 2 என பரந்த அளவிலான வாகன வரிசையை BYD தற்போது வழங்குகிறது. அத்துடன், இலங்கையின் முக்கிய நகரங்களில் புதிய காட்சியறைகளை நிறுவியுள்ளதன் மூலம், தனது சந்தை ஆதிக்கத்தை அந்நிறுவனம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் BYD வாகனங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கையில் BYD-இன் மிகப்பெரிய சேவை நிலையம் வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான பயணிகள் வாகனங்களுக்கும் மிக விரைவாகவும், அதிக எண்ணிக்கையிலும் சேவையளிக்கும் வகையில் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் வாகன வகைகளுக்குமான சேவை வசதியை அதிகரிக்கவும், வாகன சேவை முடிக்கும் கால அளவை குறைக்கவும் இந்த சேவை நிலையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இலங்கையில் இதுவரை 10,000 வாகன சேவைகளை நிறைவு செய்துள்ள BYD நிறுவனத்திற்கு இது முக்கியமான செயல்பாட்டு சாதனையாக அமைகிறது.
இதற்கு இணையாக, John Keells CG Auto நிறுவனம் சீதுவையில் முன்னர் காணப்பட்ட ‘பார்முலா வேர்ல்ட்’ (Formula World) வளாகத்தைப் பொறுப்பேற்று, இலங்கையிலேயே BYD மற்றும் DENZA வாகனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய பிரத்தியேக வாகனத் திருத்தப்பணி நிலையத்தை (Body shop and accident repair centre) நிறுவியுள்ளது. ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குச் சேவையளிக்கும் திறன் கொண்ட இந்த நிலையம், விபத்துகளுக்குப் பிந்தைய திருத்தப்பணிகள் மற்றும் சிக்கலான உடல் பழுதுபார்ப்புகளை சரிசெய்வதில் இலங்கையில் ஒரு தனித்துவமான தீர்வை வழங்குகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான உயர்தரப் பழுதுபார்ப்புச் சேவைகளை நம்பிக்கையுடன் பெற்றுக்கொள்ள முடியும்.
கொழும்புக்கு வெளியே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் BYD நிறுவனம் தனது சேவை வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், நீர்கொழும்பு, காலி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் புதிய சேவை நிலையங்களை நிறுவியுள்ளது. பிராந்திய ரீதியிலான இந்த விஸ்தரிப்பின் மூலம், நாடு பூராகவும் உள்ள வாடிக்கையாளர்கள் தமக்கான சேவைகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…
SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…
Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…
Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…
The Singer Fashion Academy hosted En Vogue 2026, a runway presentation, celebrating creativity, craftsmanship, and…