கிளவுட்ஃப்ளேர் செயலிழப்பால் உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது உலகளாவிய இணைய உட்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் (Cloudflare)-இல் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணையத்தின் சில பகுதிகள் முடங்கியுள்ளன.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் சேவை கண்காணிப்புத் தளங்களின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.இதன் விளைவாக, X சமூக ஊடகம், லெட்டர்பொக்ஸ்ட் (Letterboxd) உள்ளிட்ட பல பிரபலமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிளவுட்ஃப்ளேரின் சொந்த நிலைத் தகவல் பக்கமும் (status page) சில நேரம் செயலிழந்தது.
அத்துடன், கெண்வா (Canva), செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI)-இன் ChatGPT உள்ளிட்ட பல சேவைகளும் முடங்கின.சண்டியாகோ (Santiago) தரவு மையத்தில் திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்புப் பணிகளே (scheduled maintenance) இந்தச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கிளவுட்ஃப்ளேர் நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன், நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், சிக்கலைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்தது. சில பகுதிகளில் சேவைகள் சீரடையத் தொடங்கியிருந்தாலும், ஏனைய பகுதிகளில் முடக்கம் நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…