இடப்பக்கம் முதல்: இசுரி லியானகே (பிராண்ட் எக்ஸிகியூட்டிவ், Haleon Lanka), சதீஸ்காந்த் சிதம்பரம் (மூத்த மேலாளர் – மருத்துவ சந்தைப்படுத்தல், Haleon Lanka), மஞ்சுல வீரகோன் (வர்த்தக முன்னணி – இலங்கை மற்றும் மாலத்தீவு, Haleon Lanka), டாக்டர் ஆனந்த ரத்நாயக்கே (தலைவர் – SLDA), டாக்டர் ரவிப்ரியா ரணவக்க (கௌரவ பிரதான செயலாளர் – SLDA), டாக்டர் நிலந்த ரத்நாயக்கே (தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் – SLDA), டாக்டர் என். முகுந்தன் (கௌரவ உதவி செயலாளர் – SLDA), டாக்டர் ஷாமில் பத்மபெரும (குழு உறுப்பினர் – SLDA).
1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும் முதலாவது பல்தேசிய மருந்து நிறுவனமான GlaxoSmithKline Healthcare என உத்தியோகபூர்வமாக அறியப்படும் பனடோல், அயோடெக்ஸ், ஈனோ போன்ற முன்னணி வர்த்தக நாமங்களின் தயாரிப்பாளரான Haleon Sri Lanka நிறுவனம் மார்ச் 20ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் 2026 உலக வாய் சுகாதார தின நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ பங்காளராகத் தொடர்ச்சியாகவும் இரண்டாவது தடவையாக இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கைச்சாத்திடப்பட்டது. வாய் சுகாதாரம் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் ஒத்துழைப்பு வழங்குவதை வலியுறுத்தும் வகையில் ‘மகிழ்ச்சியான வாய்… மகிழ்ச்சியான வாழ்க்கை’ என்ற உகலளாவிய தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2026 மார்ச் 4ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
இலங்கை பல் மருத்துவ சங்கத்திற்கும், சென்சொடைன் சந்தைப்படுத்துனர்களான Haleon நிறுவனத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மையின் ஊடாக உலக வாய் சுகாதார தினக் கொண்டாட்டத்தின் வழமையான முறைகளை மாற்றுவதே பிரதான நோக்கமாகும். “#வாய் சுகாதாரத்திற்கு உணர்திறன் மிக்கவர்களாக இருங்கள்: முதலாவது அடியை எடுத்துவையுங்கள்” (#BeSensitive To Oral Health: Take the first step”) என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக உலக வாய் சுகாதார தினத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கூட்டாண்மை அமைகின்றது. மார்ச் மாதம் முழுவதிலும் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பிரசாரத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் கூடிய வாய்வழி சுகாதாரப் பராமரிப்புத் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகள் பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஊடாகக் கொண்டு சேர்க்கப்படவிருப்பதுடன், இது அனைவரும் தமது வாய்வழி சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும்.
நாடு முழுவதிலும் வாய்வழி சுகாதாரம் பற்றிய உறுதியான நன்மைகள் ஏற்படும் வகையில் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை விரிவுபடுத்த Haleon நிறுவனமும், இலங்கை பல் மருத்துவ சங்கமும் இணைந்து பணியாற்றும். ஏறத்தாழ 10,000 இலங்கையர்கள் நன்மையடையும் வகையில் நாடு முழுவதிலும் இலவச பல் பரிசோதனை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
உலக வாய் சுகாதார தினத்தின் ஆரம்ப தினமான மார்ச் 20ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள தேசிய நிகழ்வு இந்தப் பிரசாரத்தின் மையப்பகுதியாக அமையும். சிறந்த வாய்வழி சுகாதாரம் மற்றும் சரியான நடைமுறைகள் பற்றி மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இங்கு இலவச பல் பரிசோதனைகள், வாய் சுகாதார குறித்து விழிப்புணர்வு மற்றும் பற்களின் உணர்திறன் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள சமூகங்கள் மத்தியில் தரமான பல் பராமரிப்பு வசதி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலான இந்த முயற்சியில் இலங்கை பல் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த சகல உறுப்பினர்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளனர்.
சென்சொடைன் பற்பசை சந்தைப்படுத்துனர்களான Haleon நிறுவனத்திற்கும், இலங்கை பல் மருத்துவ சங்கத்தினருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் கூட்டாண்மையானது அறிவூட்டல், விழிப்புணர்வு மற்றும் தடுப்புக்கான சேவைக்குரிய அணுகல் போன்றவற்றின் ஊடாக தரம்மிக்க வாய்வழி சுகாதாரத்தின் தரத்தை உயர்த்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பறைசாற்றுகின்றது.
உணர்திறன் கொண்ட பற்களுக்கு நிவாரணம் வழங்கும் முன்னணி சென்சொடைன் பற்பசைக்காக Haleon நிறுவனம் உலகளாவிய ரீதியில் பெயர்பெற்று விழங்குகின்றது. இந்த ஒத்துழைப்பானது வாய்வழி சுகாதாரம் பற்றிய அறிவூட்டல் மற்றும் அணுகல் தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. குறிப்பாக பல இலங்கையர்களைப் பாதிக்கும் பல் உணர்திறன் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உதவும்.
இலங்கையர்கள் வாய்வழி சுகாதாரத்தில் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பதையும், சிறந்த சுகாதார நடைமுறைகளுக்கான முதலாவது அடியை எடுத்து வைப்பதையும் சென்சொடைன் ஊக்குவிக்கின்றது.
Seylan Tikiri proudly revived the Tikiri Student Savings Centre at S. Thomas’ Preparatory School during…
JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அதன் நுகேகொடை கிளையை இலக்கம். 136/5, S. De S.…
Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர்…
By Rachel Conlan, Global Chief Marketing Officer at Binance For decades, financial inclusion was measured…
இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில் உள்ளடக்கம், தலைமைத்துவம் மற்றும் வாய்ப்புகள் குறித்து City of Dreams Sri Lanka பெருமிதம்…
பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது,…