Categories: Local

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் ; மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், சுயாதீன அலுவலக ஊழியர் சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், கூட்டு மின்சார சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கம், பதவிநிலை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், நுகர்வோர் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், களஞ்சியப் பொறுப்பதிகாரிகள் சங்கம், வழங்கல் உத்தியோகத்தர்கள் சங்கம், காசாளர் (பணப் பொறுப்பு) உத்தியோகத்தர்கள் சங்கம், கணக்கு உதவியாளர்கள் சங்கம், வயரிங் செய்பவர்கள் மற்றும் தொழிநுட்ப ஊழியர் சங்கம், உள்ளக தணிக்கை உத்தியோகத்தர்கள் சங்கம், விசாரணை உத்தியோகத்தர்கள் சங்கம், வரைவாளர்  சங்கம், சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் சங்கம், கட்டுப்பாட்டு அறை இயக்குநர்கள்  சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம், பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே இவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

gurueaswar

View Comments

  • **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

7 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

9 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

9 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

10 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

10 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago