துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, முகத்துவாரம் போகஹ சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடையவர் ஆவார். கைதுசெய்யப்பட்டபொழுது 11 கிராமும் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…