இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதேநேரம் பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 02) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த தீர்மானம், எதிர்கட்சியினரின் மறுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தமே, மீனவர் கைது மற்றும் சில பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது என்பதையும் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று…
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் 'ஒப்பரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின்…
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…
கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் . தமிழ் அரசுக் கட்சி 13 (10 வட்டாரம் + 3 போனஸ்)தமிழ் காங்கிரஸ் 12…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஹம்பாந்தோட்டை - ஹம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக்…