EDEX Expo 2026 இல் புத்தாக்கமான பயிலல் வழிமுறைகளை SLT-MOBITEL Nebula Institute of Technology வெளிப்படுத்தியது
SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology, EDEX Expo 2026 கண்காட்சியில் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக தங்க அனுசரணையாளராக (Gold Sponsor) பங்கேற்றிருந்தது. இதன் கொழும்பு கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை BMICH இலும், அதனைத் தொடர்ந்து கண்டி கண்காட்சி ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கண்டி சிட்டி சென்டரிலும் நடைபெற்றன. இந்த ஒத்துழைப்பானது, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட கல்வியை வழங்குவதில் இந்நிறுவனத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் முன்னணி கல்வி மற்றும் தொழில் கண்காட்சியுடன் SLT-MOBITEL கொண்டுள்ள தசாப்த காலத் தொடர்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தனது 22 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் EDEX Expo கண்காட்சியானது, மாணவர்களைக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுடன் இணைக்கும் இலங்கையின் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு தளமாகத் தொடர்ந்து விளங்குகின்றது. கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெற்ற இக்கண்காட்சிகள் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களை கவர்ந்திருந்ததுடன், ஒவ்வொரு பகுதியிலும் 200 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களின் பங்கேற்பையும் கொண்டிருந்தன.
கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெற்ற EDEX Expo 2026 கண்காட்சியின் போது அமைக்கப்பட்டிருந்த SLT-MOBITEL Nebula இன் விசேட காட்சிகூடம், வருகை தந்தவர்களுக்கு நிறுவனத்தின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற honours பட்டங்கள் மற்றும் விசேட தொழில்சார் சான்றிதழ் பாடநெறிகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியது. அத்துடன், நேரடி விளக்கக் காட்சிகள் மற்றும் 30 நிமிட கருத்தரங்கு அமர்வுகள் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது எதிர்கால தொழில் வழிகாட்டல்களை ஆராய்வதற்கும் கல்வி நிபுணர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வெற்றிகரமாக இடம்பெற்ற கொழும்பு மற்றும் கண்டி கண்காட்சிகளின் போது, மாணவர்கள் தமது கல்வி இலக்குகளை மேலும் விரிவாக ஆராய்வதற்கான புதிய வாய்ப்புகளை EDEX Expo 2026 தொடர்ச்சியாக வழங்கியிருந்தது.
வலுவான கல்விசார் பாடநெறிகளைக் கொண்டுள்ள Nebula Institute of Technology, பிரித்தானியாவின் University of Hertfordshire, UK உடன் கொண்டுள்ள நேரடித் தொடர்பின் ஊடாக, Electrical & Electronic Engineering, Robotics & Artificial Intelligence மற்றும் Data Science ஆகிய துறைகளில் Honours Degree பாடநெறிகளை வழங்குகின்றது. இவை வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இப்பல்கலைக்கழகமானது பிரித்தானியாவின் London South Bank University, UK உடன் இணைந்து Electrical & Electronic Engineering, Computing in Artificial Intelligence மற்றும் Computing in Cyber Security ஆகியவற்றில் ‘Top-up’ பட்டப்படிப்புகளையும் வழங்குகின்றது.
மேலும், SLT-MOBITEL Nebula இனால் Pearson BTEC தகைமைகளை வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பொறியியல் (Engineering), டிஜிட்டல் தொழில்நுட்பம் (Digital Technology) மற்றும் கணினித்துறை (Computing) ஆகிய துறைகளில் Level 5 HND வரையான செயன்முறைப் பாடநெறிகளையும், பாடசாலைப் படிப்பை முடித்தவர்களுக்கான அடிப்படை டிப்ளோமா (Foundation Diplomas) பாடநெறிகளையும் இது வழங்குகின்றது. அத்துடன், Telecommunication Technician NVQ Level 4, CompTIA Security+ போன்ற விசேட சான்றிதழ் பாடநெறிகளையும், Optical Fibre மற்றும் Network Security தொடர்பான கற்கைகளையும் தொடர முடியும்.
மாணவர்கள் தமது உயர்தர (A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் 30% வரையான புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இது தரமான கல்வியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றது. SLT-MOBITEL இன் பிரத்தியேக கல்விப் பிரிவான Nebula Institute of Technology, இலங்கையின் முன்னணி ICT நிறுவனங்களில் ஒன்றினுள் நேரடியாக தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது. இங்கு வழங்கப்படும் அனைத்துத் தகைமைகளும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்டவை என்பதுடன், இவை உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான வாய்ப்புகளுக்கு திறவுகோலாக அமைந்துள்ளன.
வெலிசறை, கண்டி மற்றும் மொரட்டுவை ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ள SLT-MOBITEL Nebula Institute of Technology, நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் மாணவர் சமூகத்திற்கு சேவையாற்றுவதுடன், கைத்தொழில் தேவைகளுக்கு ஏற்ற திறன்களுடன் எதிர்கால தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கி வருகின்றது
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை…
Sirus Migration and Education is proud to announce that world-renowned statistician and custodian of the…
Seylan Bank PLC has entered a strategic partnership with DIMO, an authority in automotive excellence…
செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை…
The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…
As Child Action Lanka (CAL) marks its 20th Anniversary under the theme “Every Child Can,”…