சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 45,420 குடும்பங்களைச் சேர்ந்த 147,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் செவ்வாய்க்கிழமை (09) தகவல் வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 45,420 குடும்பங்களைச் சேர்ந்த 147,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 வீடுகள் முழுமையாகவும் 2,182 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 37,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர் பிரிவுகளில் 26,009 குடும்பங்களைச் சேர்ந்த 86,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுரை 727 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 08 பேர் உயிரிழந்ததுடன் 6,942 குடும்பங்களைச் சேர்ந்த 23,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுரை 111 வீடுகள் முழுமையாகவும் 509 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…
View Comments
Vietnam crew, what's the story with fc88vn? Worth checking out, or just another flash in the pan?