இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
அதுவும் இரண்டாவதாக வெளிவந்த பாடல் வெறித்தனமாக இருந்தது. கண்டிப்பாக ஏப்ரல் 10ம் திகதி அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து திரையரங்கில் காத்திருக்கிறது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்காக அனுப்பவேண்டிய சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படம் சிறப்பாக வந்துள்ளது என கூறி படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
பொதுவாக சென்சாரில் உள்ளவர்கள் சில நல்ல திரைப்படங்களுக்கு மட்டும் தான் இப்படி தங்களது பாராட்டுகளை தெரிவிப்பார்கள். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு சென்சார் குழுவினர் பாராட்டியுள்ளது, படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது
கண்டிப்பாக ஏப்ரல் 10ம் திகதி அஜித் ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில்…
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள்…
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து…
இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற…
6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார…
நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான…