Categories: Business

குமாரிகா: இலங்கை கூந்தல் பராமரிப்பை உலகிற்கு கொண்டு வந்து 30 வருடங்கள்

கூந்தல் பராமரிப்பில் இயற்கையான தரம் மற்றும் புத்தாக்கத்திற்கான பெயரான குமாரிகா, அதன் 30ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இந்த வர்த்தகநாமம் உள்நாட்டு தெரிவாக இருந்து தற்போது சர்வதேசத்திலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தனித்துவமான ஹெயார் ஒயில், ஷாம்பு, கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு வகைகள் மூலம உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நுகர்வோரை கவர்ந்துள்ளது. குமாரிகா 15 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் உலகம் முழுவதும் பல்வேறு சந்தைகளை தொடர்ச்சியாக கைப்பற்றி வருகிறது. இந்த வர்த்தகநாமம் இலங்கையின் ஒரு வீட்டுப் பெயர் மாத்திரமல்லாது, உலகளாவிய ரீதியில் தேசிய விசேடத்துவத்திற்கு புகழ்பெற்ற இலங்கையின் தூதுவராகவும் திகழ்கின்றது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயராக குமாரிகா இருந்து வருகிறது. கூந்தல் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்ட குமாரிகா, அதன் பின்னர் தலைமுறை தலைமுறையாக தினசரி அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளதோடு, மேன்மை மற்றும் பாரம்பரியத்தை பேணும் அழகையும் வழங்க உறுதிபூண்டுள்ளது. அது மாத்திரமன்றி, 2025 ஆம் ஆண்டு துபாய், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியாவில் இடம்பெறும் புகழ்பெற்ற அழகுக் கண்காட்சியான Beautyworld நிகழ்விலும் குமாரிகா பங்கேற்கிறது. இந்த உணர்வானது மில்லியன் கணக்கான இலங்கையர்களின் எண்ணத்தை எதிரொலிப்பதோடு, இந்த வர்த்தகநாமத்தை ஒரு கலாசார சின்னமாகவும், கூந்தல் பராமரிப்புத் துறையின் தரத்தின் அளவுகோலாகவும் நிலைநிறுத்தியுள்ளது.

குமாரிக்காவின் வெற்றியானது உள்நாட்டுச் சந்தையில் மாத்திரம் நின்றுவிடவில்லை. இன்று, இந்த வர்த்தகநாமம் அதன் முதன்மையான ஹெயார் ஒயிலை 15 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது அதன் வலுவான சர்வதேச இருப்பை எடுத்துக் காட்டுகிறது. இதன் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் மலேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் உள்ளடங்குவதோடு, அங்கு குமாரிகா முக்கிய சந்தைத் தலைமையை கொண்டுள்ளது. அத்துடன் பங்களாதேஷில், உயர் தரத்தில் அமைந்த ஒரு பிரத்தியேக உற்பத்தித் தொழிற்சாலையையும் வர்த்தகநாமம் கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி மலேசியா, மாலைதீவு, நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள், தீவுகளுக்கும் மற்றும் குமாரிகாவின் விசேடத்துவத்திற்கான நற்பெயரானது தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வரும் முக்கிய சந்தைகளுக்கும் குமாரிகா ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் SLIM EXPORT BRAND விருதுகளில் GOLD விருது மற்றும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையின் கௌரவம் உள்ளிட்ட மதிப்புமிக்க பாராட்டுகள் மூலம் இந்த வெற்றிகள் கௌரவிக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் இவ்வர்த்தகநாமத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுவதோடு, ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அதை முன்னெடுப்பதில் வெற்றிபெறும் வர்த்தகநாமங்கள் எதிர்காலத்தை நோக்கியதாக ஆதரிக்கப்பட வேண்டும் என்பதை நாம் முன்னிலைப்படுத்த வேண்டுமென, வெளிப் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வர்த்தகநாமத்தின் சர்வதேச ஈர்ப்பு தொடர்பில், Hemas Consumer Brands கூந்தல் பராமரிப்பு வகைகள் முகாமையாளர் ஹிருஷி பெனாண்டோ தெரிவிக்கையில், “இது ஒரு தயாரிப்பை விற்பனை செய்வது மட்டுமல்லாது, மூலிகைப் பராமரிப்பு மூலம் உள்ளம் மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் ஊட்டமளிக்கும் எமது பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியதாகும். அத்துடன் எமது தோற்றம், உத்தரவாதமான பெறுபேறுகள் மற்றும் வர்த்தகநாம வாக்குறுதி காரணமாக நாம் தனித்தனமையுடன் விளங்குகிறோம். அந்த வகையில், இலங்கையின் விசேடத்துவத்திற்கான உலகளாவிய தூதுவராக குமாரிகா மாறியுள்ளது.” என்றார்.

குமாரிகாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு, அதன் மாறுபட்ட சந்தைப்படுத்தல் உத்தி மற்றும் தனித்துவமான விற்பனை பொறிமுறையே காரணமாகும். இந்த வர்த்தகநாமம் தனது பிம்பத்தை உள்நாட்டில் வலுப்படுத்த பல்வேறு உயர் தாக்கம் கொண்ட விளம்பர பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது. அத்தகைய ஒரு பிரசாரமே ‘Hair Play’ ஆகும். இது அதன் நடமாடும் சலூன் பிரிவான “Hair Play Studio” மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகச் சென்று வழங்கியது. இந்த Hair Play பிரசாரமானது, குமாரிகா ஷாம்பு வரிசையின் மிகவும் புகழ்பெற்ற மீள் அறிமுகத்துடன் ஒரு முக்கிய மைல்கல்லை எடுத்துக் காட்டியது. இந்த மீள் அறிமுகத்தின் மூலம், வர்த்தகநாமமானது அதன் ஷாம்பு வரிசையை நுகர்வோர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைத்ததோடு, பல்வேறு கூந்தல் பராமரிப்பு பிரச்சினைகளுக்கு மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளையும் வழங்கியது. ஒரு உறுதியான வாக்குறுதியுடன், நுகர்வோர் தங்கள் கூந்தலை ஸ்டைலிங் சிகிச்சைகள் மூலம் பயன்படுத்த ஊக்குவித்த அதே நேரத்தில் தமது ஸ்டைல் ​​செய்யப்பட்ட கூந்தலை சீர் செய்யவும் பாதுகாப்பாக பேணுவதன் மூலமும் கூந்தலுக்கு உரிய பராமரிப்பைப் வழங்குவதை குமாரிகா உறுதி செய்தது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக BTL செயற்படுத்தலான ‘Hair Play Studio’ பிரசாரத்தை இவ்வர்த்தகநாமம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்கள் தொழில்முறை ரீதியான கூந்தல் பகுப்பாய்வை மேற்கொள்ளவும், புதிய குமாரிகா ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட ஹெயார் வொஷ் இனை பெறவும், தனிப்பயனாக்கப்பட்ட ஹெயார் ஸ்டைலை அனுபவிக்கவும் முடிந்தது. அது மாத்திரமன்றி குமாரிகா புதிதாக அறிமுகப்படுத்திய குமாரிகா கூலிங் ஒயில்கள் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற UAE Kerala Premier League 2024 இன் பிளாட்டினம் அனுசரணையாளராகவும், மலேசியாவில் இடம்பெற்ற Bombay Mydin Bombay Bazar நிகழ்வின் கூட்டாளராகவும் விளங்கியது. பார்வையாளர்களின் பங்குபற்றுதலுடன் கூடிய இந்த பிரசாரமானது சிறந்த வரவேற்பைப் பெற்றதோடு, இலங்கையர்களின் பல்வேறு வகை கூந்தல்களுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவியது. இந்த பிரசார நடவடிக்கைகள் யாவும், குமாரிகா கூந்தல் பராமரிப்பு துறையில் ஒரு முன்னோடி எனும் வகையிலும், தரம் மற்றும் நம்பகத்தன்மையின் முக்கிய மதிப்புகளுக்கு உண்மையாக இருக்கும் வகையிலும் தொடர்ச்சியாக உருவாகி வரும் புத்தாக்கம் சார்ந்த ஒரு வர்த்தகநாமம் எனும் வகையிலும் அதன் பங்கை வலியுறுத்துகின்றன.

குமாரிகாவில் புத்தாக்கமானது தயாரிப்பு மேம்பாட்டிற்கு அப்பால் வளர்ந்துள்ளது. தயாரிப்பு கலவைகளை மேம்படுத்துதல் மற்றும் நிலைபேறான நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் நிறுவனம் பெருமளவான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இந்த முன்னோக்கிய சிந்தனை அணுகுமுறையானது, தயாரிப்பு புத்தாக்கங்களைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்கும் பங்களிக்கிறது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், கூந்தல் பராமரிப்புத் துறையில் குமாரிகா முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்கான பரந்துபட்ட உத்தியின் ஒரு பகுதியே இதுவாகும்.

“வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை புத்தாக்கத்துடன் தொடர்ந்து வழங்கவும் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளதன் மூலம், எமது வர்த்தகநாமம் வளர்ச்சியடையவும் பல வருடங்களாக எம்முடன் இணைந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோருக்கு குமாரிகா குழு நன்றி தெரிவிக்கிறது,” என குமாரிகாவில் பணியாற்றும் ஹிருஷி பெனாண்டோ தெரிவிக்கின்றார்.

தற்போது நான்காவது தசாப்தத்தில் காலடி வைக்கும் குமாரிகா, சிறந்து விளங்குவதற்கும் புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கும் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதன் அழகு மற்றும் தரம் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ஆதாரமாகவும், உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. எதிர்காலத்தை நோக்கி, குமாரிகா அதன் சிறந்த பாரம்பரியத்தைத் தொடரத் தயாராக உள்ளது. மூலப்பொருட்களின் தரம் வர்த்தகநாமத்தின் உயர் தரங்களை பூர்த்தி செய்கிறது என்பதை உறுதி செய்து, உள்ளூர் விநியோகச் சங்கிலி திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதே நேரத்தில், ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உருவாகி வரும் பொருளாதார வாய்ப்புகளைக் கைப்பற்றும் இலக்குகளுடனான உத்திகளுடன், தமது சர்வதேச இருப்பை இவ்வர்த்தகநாமம் புதிய சந்தைகளில் விரிவுபடுத்துகிறது.

மூன்று தசாப்த வெற்றியைக் குறிக்கும் Kumarika , இயற்கையான கூந்தல் பராமரிப்பில் தொடர்ந்து முன்னணியில் திகழ்வதுடன், உலகம் முழுவதும் அதன் கால்தடத்தை பதித்து வருகின்றது.

Hemas Consumer பற்றி

கடந்த 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தங்களை நிறுவ உதவிய நுகர்வோரை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் நிறுவனம் பெருமை கொள்கிறது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

7 News Pulse

Recent Posts

டேவிட் பீரிஸ் குழுமம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்குகிறது.

டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி…

1 week ago

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக புலமைப்பரிசில்களை வழங்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்

பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில்…

1 week ago

இலகுநிதிமுகாமைத்துவத்துக்காக ஒருபுதிய டிஜிட்டல்வங்கித் தளத்தை ஆரம்பித்துள்ள HNB FINANCE

HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும்…

1 week ago

Sri Lanka Celebrates Four Decades of Rowing Excellence with the 40th Rowing National Championships

The Amateur Rowing Association of Sri Lanka (ARASL) is thrilled to announce the highly anticipated…

1 week ago

Janashakthi Life empowers young imaginations as ‘Nidahas Adahas’ Art Competition approaches 20,000 entries

Janashakthi Life, a subsidiary of JXG (Janashakthi Group), proudly marks a significant milestone as it…

1 week ago

AIA Insurance & PodHub highlight Noeline Pereira’s journey to authentic well-being

The 4th instalment of PodHub and AIA Insurance’s compelling four-part ‘Rethink Healthy’ podcast series featured…

1 week ago