Categories: Local

கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நுகேகொடை மற்றும் கொஹுவல சந்திப்புக்கு இடையில் நேற்று இரவு(22.12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் பொலிஸார் கூடுதல் உத்தியோகத்தர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கொழும்பு களுபொவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்துக்குப் பொறுப்பான சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் தப்பிச் செல்கிறார் என்பதால், பொலிஸார் களனி பாலம் வரையிலான பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபரை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த பகுதிகளில் பயணிக்கும் போது அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

7 News Pulse

View Comments

  • If you're looking for options, 188win8 is worth considering. They've got a good variety of games and some cool promotions running. Definitely give it a try! 188win8

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

14 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

15 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

16 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

16 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

16 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago