Categories: LocalPolitics

கொழும்பு மாநகர சபை வரவு–செலவு: வருமான இலக்குகள் நடைமுறைக்கு ஏற்றதா? – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு–செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில எதிர்பார்க்கப்பட்ட வருமானங்கள் ஆவணத்தில் அழகாக தோன்றினாலும், அவை நடைமுறையில் சாத்தியமா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் எச்.எம். மன்சில் தெரிவித்தார். இந்த வருமான இலக்குகளை அடைவதற்காக வரி செலுத்தும் மக்கள்மீது கூடுதல் சுமை விதிக்கப்படுமானால், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவு திட்டம், மேயர் விராய் கெலி பல்தஸாரினால் திங்கட்கிழமை (22) சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் ஆரம்ப உரையிலேயே மன்சில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வரவு–செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட பல விடயங்கள் எழுத்தில் நன்றாக இருந்தாலும், அவற்றை எவ்வாறு நடைமுறையில் அமல்படுத்தப் போகிறார்கள் என்பது தெளிவில்லை என்றார். குறிப்பாக, வருமான இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், மேயர் அதற்காக முயற்சிப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டிற்காக வரி வருமானமாக 7,100 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் 6,300 மில்லியன் ரூபா இலக்காக இருந்தும் 4,700 மில்லியன் ரூபா மட்டுமே வசூலிக்கப்பட்டது என்றும், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 5,100 மில்லியன் ரூபாவாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், வருமான உயர்வு சொத்துகளின் மதிப்பை அதிகரிப்பதன் மூலமா, சொத்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமா, அல்லது வரி வீதங்களை உயர்த்துவதன் மூலமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக அவர் கூறினார்.

அதேபோல், வர்த்தக அனுமதிப்பத்திர கட்டணங்களிலும், வணிக வரியிலும் கடந்த ஆண்டுகளில் எதிர்பார்த்த வருமானங்கள் அடையப்படாத நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவு திட்டத்தில் மிக அதிகமான வருமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை யதார்த்தமற்றதாக இருப்பதாக மன்சில் விமர்சித்தார்.

எனவே, கொழும்பு மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவு திட்டம் வெளிப்படையாகவும் அழகாகவும் தோன்றினாலும், எதிர்பார்க்கப்படும் வருமானங்களை மக்கள்மீது கூடுதல் வரிகளை விதித்து பெற முயன்றால், அதனை கூட்டு எதிர்க்கட்சி ஏற்காது என அவர் வலியுறுத்தினார்.

gurueaswar

View Comments

  • **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Recent Posts

புயல் காரணமாக சேதமடைந்த ஊழியர்களின்வீடுகளை மீண்டும் கட்டமைக்க உதவுகிறது HNB FINANCE

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை…

7 hours ago

Sirus Migration Brings Duckworth-Lewis-Stern Custodian Prof. Steven Stern to Sri Lanka

Sirus Migration and Education is proud to announce that world-renowned statistician and custodian of the…

7 hours ago

Seylan Bank Partners with DIMO to Offer Fast-Track Leasing Solutions for Commercial & Passenger Vehicle Buyers

Seylan Bank PLC has entered a strategic partnership with DIMO, an authority in automotive excellence…

7 hours ago

செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை  அறிமுகப்படுத்துகிறது

செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை…

7 hours ago

கல்வியை எதிர்கால தொழில் வாய்ப்புகளாக மாற்றியமைப்பது

EDEX Expo 2026 இல் புத்தாக்கமான பயிலல் வழிமுறைகளை SLT-MOBITEL Nebula Institute of Technology வெளிப்படுத்தியது SLT-MOBITEL இன்…

8 hours ago

Dharmaraja Clinch Third Consecutive Under-14 Hockey Title

The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…

4 days ago