Categories: Local

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்த 6 பேர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக திரும்பியுள்ளனர்.

அவர்கள் நால்வரையும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு படகோட்டிகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று அழைத்து வந்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த பொலிஸார் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் புகுந்த நால்வரையும், அவர்களை அழைத்து வந்த படகோட்டிகளையும் கைது செய்து, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Doneproduction

Recent Posts

இருவேறு பகுதிகளில் இருவர் மர்மமான முறையில் மரணம்

வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்பிலிபிட்டிய…

9 hours ago

பவுசர் விபத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட…

9 hours ago

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள்.

அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்…

20 hours ago

உப்பு இறக்குமதிக்கு அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க இன்று (மே 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.…

20 hours ago

அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டொலர் பெறுமதியான உபகரணங்கள்.

அமெரிக்காவினால் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் இலங்கை ரூபா) மதிப்புள்ள கதிர்வுச்சு இனங்காணல் உபகரணங்கள் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டன.…

20 hours ago

SANKARAA hosts “SANKARAA Connect” to Showcase NetSuite Innovation and Customer Success in Sri Lanka

30th April 2025, Colombo – SANKARAA Tech successfully hosted SANKARAA Connect, the first Oracle NetSuite…

1 day ago