ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின் 10 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையை மையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. Belluna “மக்களை மையப்படுத்திய” நிறுவனம் என்பதை, இதன் மூலம் உறுதிப்படுத்துவதுடன் இலங்கையை அதன் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான தலமாக உறுதிசெய்கிறது.
அடுத்தக்கட்ட அத்தியாயமாக இலங்கையின் மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் Belluna Lanka மேலும் விரிவடைதோடு, தெற்காசியாவின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமெரிக்க டொலர் 60 மில்லியனிற்கும் அதிகமான முதலீட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத்துறையில் கால்பதிக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறுவனம் இப்போது முன்னெடுத்து வருகின்றது.
அண்மையில் ஜப்பானின் Belluna நிறுவனத்தின் தலைமைத்துவ குழுவினர் மேற்கொண்ட விஜயமானது, இரண்டு குழுக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையின் ஆவலை பிரதிபலிக்கிறது. இந்த விஜயத்தில் பல்வேறு துறையிலுமுள்ள Belluna Lanka குழுவினருடன் சந்திப்புகள் நடைபெற்றது. இக்கலந்துரையாடல்கள் கடந்து வந்த பயணத்தை மட்டுமல்லாமல் இப்புதிய ஆரம்பத்தை அர்த்தமுள்ளதாக முன்னெடுக்கும் வகையில் அமைந்திருந்தன.இத்தகைய தொடர்புகள் யாவும், தற்கால செயற்பாடுகளின் நிலவரத்தை நேரடியாக அறிந்துகொண்டு, நிலையான விடயங்களை ஒன்றாக இணைந்து கட்டியெழுப்ப Belluna நிறுவனம் கொண்டுள்ள முனைப்பின் ஒரு தொடர்ச்சி ஆகும்.
ஜப்பானின் Belluna Co. Ltd. பணிப்பாளர் Hiroshi Yasuno இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “இது நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கை சார்ந்ததாகும். இலங்கை எப்பேற்பட்ட சிரமத்திலிருந்தும் மீண்டெழும் சக்தி கொண்ட நாடாக விளங்குவது எம்மை ஊக்குவிக்கின்றது. அதற்கும் அப்பால், உள்ளூர் சமூகத்தை பற்றிய ஆழ்ந்த அறிவு, தலைமைத்துவம், மற்றும் வளமாக வளரக்கூடிய சாத்தியத்தையும் காணமுடிகின்றது. Belluna Lanka நிறுவனத்தின் பார்வையுடன் அதன் மக்கள் இலங்கையிலும், பிராந்திய அளவிலும் இந்த பயணத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்வார்கள் என நாம் ஆழமாக நம்புகிறோம்.”என்றார்.
சுயாதீனமாக இயங்கும் Belluna Lanka நிறுவனம், தனது உள்ளமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது – ஊழியர்களின் திறனை வளர்க்கும் முயற்சி, திறந்த மனதுடன் உரையாடக்கூடிய அமர்வுகள், மற்றும் அனைவரையும் ஒரே கலாசாரத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் பயிற்சிகள், ஆகியவற்றில் முதலீடு செய்து வருகின்றது. இந்த ஒருங்கிணைந்த கலாசார வழியே “The Belluna Way”. நிலையான முன்னேற்றம் என்பது மக்களை வலுப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும், நேர்மையான உரையாடலுக்கு இடமளிக்க வேண்டும், நிறுவனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரே நோக்கினை பயிற்றுவித்தல் எனும் நம்பிக்கையின் பிரதிபலிப்பே இதுவாகும்.
இது பற்றி கருத்து வெளியிட்ட Belluna Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Reyhan Morris, “நாம் எமக்கானதொரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணிக்கின்றோம். இது ஆழமான இலங்கையை மையப்படுத்திய ஒரு கதையாகும். இது பணிவில் வேரூன்றி, பங்காண்மையினால் வலுவூட்டப்பட்டு, நோக்கத்தினால் வழிநடத்தப்படுகின்றது. விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், சேவை வழங்கல் துறைகளில் நாம் வளர்ச்சியடைந்து வருகின்றோம். மேலும், தொலைநோக்கம் கொண்ட, பொறுப்பு மிக்க வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோருடன் இணைந்து நீண்டகால பெறுமதியை உருவாக்கக் கூடிய புதிய துறைகளையும் நாம் நன்கு ஆராய்ந்து வருகின்றோம்.” என்றார்.
Belluna நிறுவனம் இதுவரை தெற்காசியாவில் 200 மில்லியன் டொலருக்கும் அதிக முதலீட்டை இட்டுள்ளதுடன், இதன் புதுப்பிக்கப்பட்ட நோக்கமானது, பிராந்தியத்தின் நீண்ட எதிர்கால வாய்ப்பின் மீது நிறுவனம் கொண்ட நம்பிக்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும், மக்களின் ஆற்றல், கருத்துகள் மற்றும் பங்களிப்புகளால் இயக்கப்படும் தலைமை மீது நிறுவனமானது விசேட கவனத்தையும் கொண்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் Belluna Lanka நிறுவனத்தின் அடுத்த கட்ட பயணமானது, இலங்கையை வெறுமனே இன்னுமொரு தலமாக அல்லாமல், Belluna Co. நிறுவனத்தின் தெற்காசியவிற்கான மூலோபாய எதிர்காலத்தின் மையத் தூணாக உறுதிசெய்கின்றது.
டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி…
பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில்…
HNB Finance PLC தனது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளரின் நிதி பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், உலகில் எங்கிருந்தும்…
The Amateur Rowing Association of Sri Lanka (ARASL) is thrilled to announce the highly anticipated…
Janashakthi Life, a subsidiary of JXG (Janashakthi Group), proudly marks a significant milestone as it…
The 4th instalment of PodHub and AIA Insurance’s compelling four-part ‘Rethink Healthy’ podcast series featured…