Categories: Local

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல் ; ஒருவர் கைது

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பொதி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், 

போதைப்பொருளின் மொத்த எடை 6 கிலோ கிராம் 201 கிராம் ஆகும். விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெமட்டகொடையைச் சேர்ந்த 31 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஒருகொடவத்தை சுங்க முனையத்தில் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட  ஒரு தொகுதி மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

gurueaswar

View Comments

  • vin777vegas reminds me of a digital Vegas! The site's got a cool design, and the promotions are pretty enticing. I'm a sucker for a good Vegas vibe. Check out the feels at vin777vegas

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

12 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

13 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

14 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

14 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

14 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago