Categories: Entertainment

தளபதியின் ஒரு பட சம்பளம்…இத்தனை கோடியா?

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் விஜய், 1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்

பூவே உனக்காக இவருடைய முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, Friends என பல வெற்றிப்படங்களை தந்தார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய், தமிழ் சினிமாவிலிருந்து பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என பலராலும் கிண்டல் செய்யப்பட்டார்.

ஆனால், காவலன், நண்பன் மற்றும் துப்பாக்கி ஆகிய திரைப்படங்கள் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்து, தன்னை கிண்டல் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்தார் விஜய். இதன்பின் கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர், லியோ என பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.

இந்த நேரத்தில் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகம் படத்தின் The First Roar என்ற டீசர் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தளபதி விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 474 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி முதல் ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்கின்றனர். ஆனால், இந்த சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்து வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Doneproduction

Recent Posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30…

5 hours ago

ஹௌதி இயக்கம் அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை

ஈரானின் அணு நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கா இந்த போரை முடிக்க முடியும் என நினைத்தால் அது பிழையான நம்பிக்கை…

5 hours ago

ஜப்பானை உலுக்கிய நில அதிர்வு

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த…

5 hours ago

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்த உலக நாடுகள்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை பல வெளிநாட்டு நாடுகள் கண்டித்துள்ளன. சில நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மற்றவர்கள் அமைதிக்கு…

5 hours ago

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சமீபத்தில் உயர்த்தப்பட்ட உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு…

5 hours ago

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் அணு மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில்…

5 hours ago