Categories: Business

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த சொகுசு விடுதி City of Dreams Sri Lanka-இற்கு வலுச்சேர்க்கும் பெண்கள்

இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில் உள்ளடக்கம், தலைமைத்துவம் மற்றும் வாய்ப்புகள் குறித்து City of Dreams Sri Lanka பெருமிதம் கொள்கிறது.

கொழும்பு, 2026 மார்ச் 04: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka), நாட்டின் சுற்றுலாத்துறையில் பிரம்மாண்டம், நவீனத்துவம் மற்றும் சர்வதேச தரத்துடன் கூடிய ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு விருந்தோம்பல், கேமிங், சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த பிரம்மாண்டமான கட்டமைப்பின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்குப் பின்னால் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவில் பெண்கள் வெறும் விருந்தோம்பல் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் துறைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் கண்காணிப்பு, கேமிங் செயல்பாடுகள், தகவல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவம் போன்ற அதீத பொறுப்புமிக்க சவாலான துறைகளிலும் அங்கம் வகிக்கின்றனர். பகுப்பாய்வு சிந்தனை, சட்ட ஒழுங்குமுறை இணக்கம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இத்துறைகளின் வெற்றியை வடிவமைப்பதில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.

இந்த ஒருங்கிணைந்த விடுதி மாதிரியானது, பன்முகத்தன்மை கொண்ட திறமையாளர்கள் மிளிர்வதற்கு ஏற்ற ஒரு துடிப்பான தொழில்முறை சூழலை உருவாக்குகிறது. இது, இலங்கையின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு பரந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதுடன், சர்வதேச தரத்திலான அனுபவங்களைப் பெற்று தலைமைத்துவ நிலைக்கு உயர்வதற்கான சிறந்த களமாகவும் அமைந்துள்ளது.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் உள்ளடக்கல் தொடர்பான அர்ப்பணிப்பானது வெறும் பிரதிநிதித்துவத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. சமமான வேலைவாய்ப்பு, கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல்;, தலைமைத்துவப் பயிற்சிகள் மற்றும் வலுவான மகப்பேறு கால ஆதரவுக் கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் பெண்கள் இந்த நிறுவனத்திற்குள் நிலையான முறையில் வளர்ச்சியடைவதை இது உறுதிப்படுத்துகிறது. மேலும், பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான புகார் அளிக்கும் முறைமையானது, ஊழியர்களிடையே நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வலுப்படுத்துவதுடன், அவர்கள் பாதுகாப்பாகவும், மதிக்கப்படுபவர்களாகவும் உணரக்கூடிய ஒரு சிறந்த பணிச்சூழலை உருவாக்குகிறது.

இந்த தத்துவத்தின் மையத்தில் ஒரு எளிய கோட்பாடு உள்ளது: ‘பழமைவாதக் கருத்துக்களை விட செயல்திறன் தான் அதிகம் பேசுகிறது.’

இது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் துணைத் தலைவரும், பொது முகாமையாளருமான (சொத்துக்கள் பிரிவு) மைக்கல் ஹபாஷி கருத்து தெரிவிக்கையில், “எங்கள் நிறுவன கலாச்சாரத்தை வரையறுப்பது என்னவென்றால் — இங்கு வாய்ப்புகள் திறமையினாலும் செயல்திறனாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன. கண்காணிப்பு மற்றும் கேமிங் முதல் தகவல் பாதுகாப்பு மற்றும் நிர்வாக தலைமைத்துவம் வரை முக்கியமான செயல்பாட்டுப் பிரிவுகளில் பெண்கள் தலைமை தாங்குவதைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எமது தொழில்முறை கட்டமைப்பின் வலிமைக்கும் நம்பகத்தன்மைக்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது,” என்றார்.

இலங்கை ஒரு போட்டித்தன்மை மிக்க உலகளாவிய சுற்றுலாத் தலமாகத் தன்னை வலுப்படுத்தி வரும் நிலையில், உள்ளடக்கிய மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பணிச்சூழல்களை உருவாக்குவது நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அனைத்து மட்டங்களிலும் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலமும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதன் மூலமும், பன்முகத்தன்மை, தொழில்முறை சிறப்பு மற்றும் பொதுவான இலக்குகளே நிலையான சுற்றுலா வளர்ச்சியின் அடிப்படை என்பதை சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சர்வதேச மகளிர் தினத்தில், தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, தனது வெற்றியானது நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு வலுச்சேர்க்கும் பெண்களிடமிருந்து பிரிக்க முடியாதது என்பதை அங்கீகரிக்கிறது. பெண்களின் இந்தப் பங்களிப்பு என்பது வெறும் பாரம்பரிய எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, அவர்களின் நிபுணத்துவம், மன உறுதி மற்றும் சிறந்து விளங்கும் பண்பு ஆகியவற்றாலேயே அடையாளப்படுத்தப்படுகிறது.

7 News Pulse

Recent Posts

Seylan Tikiri Brings Back Student Savings Centre at S. Thomas’ Preparatory School

Seylan Tikiri proudly revived the Tikiri Student Savings Centre at S. Thomas’ Preparatory School during…

4 hours ago

உலக வாய் சுகாதார தினம் 2026 நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக Haleon நிறுவனம்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் கூட்டாண்மை

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும்  முதலாவது பல்தேசிய மருந்து நிறுவனமான GlaxoSmithKline Healthcare என உத்தியோகபூர்வமாக அறியப்படும் பனடோல்,…

5 hours ago

Janashakthi Finance relocates Nugegoda branch to enhance customer convenience and accessibility ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் அணுகலை மேம்படுத்த அதன் நுகேகொடை கிளையை இடமாற்றம் செய்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்)இன் உறுப்பினரான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அதன் நுகேகொடை கிளையை இலக்கம். 136/5, S. De S.…

5 hours ago

Prime Group இளைஞர்களின் விருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் Battle of the Blues மற்றும் Maroons சமர் போட்டிகளின் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக தொடர்ந்தும் அனுசரணை

Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர்…

5 hours ago

The Digital Leapfrog: Why the Next Era of Economic Agency for Women is On-Chain

By Rachel Conlan, Global Chief Marketing Officer at Binance For decades, financial inclusion was measured…

5 hours ago

டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சன்ஸைன் ஹோல்டிங்ஸ்

பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது,…

5 hours ago