Categories: SPORTS

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.

இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது.

இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் பங்குபற்றும் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் நேற்றுமுன்தினம் சென்னை சென்றடைந்தனர்.

இந்த அணியில் நர்வின் கனேஷ், ப்ரென்ட் தேவகுமார், சிம்ரன் யோகநாதன், சாருக்க பெர்னாண்டோ, மெத்திக்க ஜயசிங்க, மிந்திக்க விஜேநாயக்க, சஞ்சீவ குலமின, நிமேஷ் பெர்னாண்டோ, பாரத ரணதுங்க, தசுன் மெண்டிஸ், சசிந்து கஜநாயக்க, ருக்ஷான் அத்தபத்து, ஷாரோ பெரேரா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் தனது முதலாவது போட்டியில் நேபாளத்தின் டைம்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகத்தை இன்றும்(ஏப்ரல் 02) மாலைதீவுகளின் ட்ரெக்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகத்தை நாளையும்(ஏப்ரல் 03) பூட்டானின் திம்ப்பு மெஜிக்ஸ் கழகத்தை ஞாயிற்றுக்கிழமையும்(ஏப்ரல் 06) தமிழ் நாடு கழகத்தை திங்கட்கிழமையும்(ஏப்ரல் 07) கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் எதிர்த்தாடவுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட கழகங்களுககு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொழும்பு புல்ஸ் கழகத்தை வெற்றிகொண்டதன் மூலம் தெற்காசிய கூடைப்பந்தாட் சங்க கழக சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற கொழும்பு கூடைப்பந்தாட்டக்
கழகம் தகுதிபெற்றது.

கொழும்பு கூடைப்பந்தாட்ட அணிக்கு “கஜா ஸ்போர்ட்ஸ்” பிரதான அனுசரணை வழங்குவதுடன் உத்தியோகபூர்வ சீருடைக்கான அனுசரணையை “மை கோலா” வழங்க முன்வந்துள்ளமை சிறப்பான விடயமே.

7 News Pulse

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

5 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

6 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

7 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

7 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

7 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago