Categories: Local

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் – செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டுகோள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துவது தொடர்பாக இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

அனர்த்தம் காரணமாக இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே, பணத்தை ஒரு தடையாக கொள்ளாமல், இழப்பீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்க தேவையான தகவல்களை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியதுடன், துல்லியமான தரவுகளை விரைவாகப் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தரவுகளை சேகரிக்கும் போது இடம்பெறும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, வழக்கமான பொறிமுறைகளுக்கு அப்பால் சென்று ஒரு விசேட குழுவை நியமித்து, குறித்த பணிகளை செயற்திறனாகவும் விரைவாகவும் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் தற்போது இடம்பெயர்ந்துள்ள மொத்த மக்கள் தொகை, அதில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை, நெல், மரக்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், கால்நடை பண்ணைகள் உட்பட கால்நடை வளத்துறைக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறை மற்றும் காலக்கெடு குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

7 News Pulse

View Comments

  • 979betcom is my go-to for weekend sports bets. Always a good selection, and the live betting is fun. Haven't had any problems so far. Check them out for yourself: 979betcom

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

3 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

4 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

5 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

5 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

5 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago