ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ பிரான்கோவிக்கும் (Damiano Francovigh) இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலி அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் தெரிவித்தார்.
இலங்கையின் சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கக் கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க எதிர்பார்த்திருப்பதாகவும் இத்தாலி தூதுவர் தெரிவித்தார்.
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும், இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கும் சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…