இன்டர் மியாமி அணியின் தலைவனாக லியோனல் மெஸ்ஸி அந்த அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார்.
இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இதன் மூலம் எம்.எல்.எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த இன்டர் மியாமி வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பாக 29 கோல்களுடன் கோன்சலோ ஹிகுயின் 70 போட்டிகளில் அடித்திருந்தார். மெஸ்ஸி அதனை 38 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
இன்டர் மியாமி அணிக்காக மொத்த போட்டிகளிலும் மெஸ்ஸி 59 போட்டிகளில் 49 கோல்களும், 23 அசிஸ்ட்ஸும் செய்து அசத்தியுள்ளார்.
கோல்கள் மட்டுமில்லாமல் அசிஸ்ட்ஸிலும் மெஸ்ஸியே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்…
இலங்கையில் கிறீம்களில் கன உலோகங்களின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சந்தையில் இருந்து…
ஹமாஸ் சிறையிலிருந்து பணயக்கைதிகளை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அழைப்பு விடுத்து அமைதியான பேரணியில் பங்கேற்றவர்கள் மீது மோலோடோவ் காக்டெய்ல்களை ஒருவர்…
இதுவரை நடந்த மிகப்பெரிய போர்க் கைதிகள் பரிமாற்றத்துடன், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கிய பெருநகரத்தில்…
பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.…
பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி…