Categories: Business

பொதுக் காப்புறுதித்துறையில் இலங்கையில் உயர்ந்த தரப்படுத்தலைக் கொண்ட வர்த்தக நாமமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் FitchA+ (lka) மூலம் சந்தையின் முதல்வன் மற்றும் அதன் நிலையான முன்னோக்கம் என்பவற்றை உறுதிப்படுத்தியுள்ளது

Fitch தரப்படுத்தலில் உறுதியான தோற்றப்பாட்டுடன் ‘A+(Ika)’ தேசிய காப்புறுதி நிதியளிப்பு உறுதிப்பாடு (IFS) தரப்படுத்தல் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உயர்ந்த தரப்படுத்தலைக் கொண்ட காப்புறுதி வர்த்தக நாமமாகவும், இலங்கையில் A+ தரப்படுத்தலைக் கொண்ட பொதுக் காப்புறுதி தாரராகவும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் காணப்படுகின்றமை மிகவும் முக்கியமானதாகும்.

இந்த ‘A+(Ika)’ தரப்படுத்தலானது SLICGL நிறுவனத்தின் உறுதியான நிதிநிலைமை மற்றும் இலங்கையின் பொதுக் காப்புறுதிச் சந்தையில் தலைவன் என்ற அதன் உறுதியான நிலையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. Fitch இன் மதிப்பீட்டின் மூலம் வலுவான வணிக உரிமை, விரிவான வணிக செயற்பாடு மற்றும் பரந்துபட்ட விநியோக வலையமைப்பு என்பவற்றின் மூலம் நிறுவனத்தின் சாதகமான நிலைமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.   

SLICGL நிறுவனம் இலங்கையின் பொதுக் காப்புறுதி சந்தையில் முதலாவது இடத்தைக் கொண்டிருப்பதுடன், இலங்கை காப்புறுதி ஒருங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அமைய (IRCSL) இந்நாட்டின் மிகவும் நம்பிக்கையைப் பெற்ற, நிதி ரீதியான நிலைப்புத் தன்மையைக் கொண்ட காப்புறுதி தாரர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தரப்படுத்தலானது நிறுவனத்தின் இறையாண்மை தொடர்பான முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை வெளிப்படுத்தியிருப்பதுடன், போதுமான மூலதனமாயமாக்கலைக் குறிப்பிடும் அதேநேரம், அதிகரித்த முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆபத்துக்களுக்குப் பங்களிப்புச் செலுத்தும் தன்மை என்பவற்றையும் கருத்தில் கொண்டுள்ளது. பணவீக்கம், அதிகமான உரிமைகோரல் செலவு மற்றும் ஒழுங்குறுத்தல் சீரமைப்புக்கள் போன்றவற்றினால் எழுத்துறுதி இலாபத்தன்மையில் அழுத்தம் காணப்பட்டபோதும், மேம்படுத்தப்பட்ட உரிமை கோரல் முகாமைத்துவம், முக்கிய வணிகத் துறைகளில் வளர்ச்சி மூலம் SLICGL நிறுவனத்தின் இலாபத்திறன் மேலும் வலுப்பெறும் என Fitch எதிர்பார்க்கிறது. இதில் வாகனக் காப்புறுதி மற்றும் தீ, சுகாதாரம் மற்றும் ஏனைய வாகனமற்ற காப்புறுதிப் பிரிவுகளின் விரிவாக்கம் என்பன இதற்கு ஒத்துழைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆபத்தை அடிப்படையாக் கொண்ட மூலதன விகிதாசார ஆகக் குறைந்தது 120% என்ற ஒழுங்குறுத்தல் அளவீட்டையும் விஞ்சும் வகையில் 2024ஆம் ஆண்டு முடிவடையும்போது SLICGL நிறுவனத்தின் மூலதன நிலைமை 277.3% என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மேம்பட்டுவரும் பொருளாதார தோற்றப்பாடு மற்றும் விரிவடைந்துவரும் சந்தை நிலைமைகளின் காரணமாக நிறுவனத்தின் முதலீட்டு வாய்ப்புக்கள் பலமடைந்து Fitch இன் உறுதியான தோற்றப்பாட்டு தரப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் நிறுவனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவான SLICGL நிறுவனம் நிலைபேறான வளர்ச்சி மற்றும் இலாபத் தன்மையில் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் மூலோபயம் புத்தாக்கம், செயற்பாட்டு திறன் மற்றும் முன்னெச்சரிக்கையான உரிமைகோரல் முகாமைத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. 2024 ஆம் ஆண்டில் SLICGL நிறுவனம் அதன் ஆயுட் காப்புறுதி நிறுவனத்திலிருந்து பிரிந்ததன் மூலம் முகாமைத்துவம், வினைத்தினான செயற்பாடு என்பவற்றின் மீது அதிக கவனத்தைச் செலுத்துவதால் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது.

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தைப் பற்றி

பொதுக் காப்புறுதியில் ஆறு தசாப்தங்களுக்கு மேலான நிபுணத்துவத்துடன், மிகவும் மதிப்பு மிக்க மற்றும் அதிகமானவர்களின் அன்பைக் கொண்ட காப்புறுதி வர்த்தகநாமமாக SLICGL திகழ்கின்றது. உறுதியான நிதிநிலைமையின் ஒத்துழைப்புடன் விரிவான காப்புறுதித் தயாரிப்புக்களை வழங்குவதில் இது பெயர்பெற்றுள்ளது. SLICGL நிறுவனம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டுள்ள 200ற்கும் அதிகமான கிளைகள் மற்றும் சேவை நிலையங்களின் ஊடாக மோட்டார், தீ மற்றும் பொறியியல், மருத்துவம், பொது விபத்து மற்றும் கடல்சார் விநியோகம் போன்ற பலதரப்பட்ட துறைகளில் காப்புறுதித் தயாரிப்புக்களை வழங்கி வருகிறது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு மற்றும் வலிமையான பாரம்பரியத்தினால் ஆதரிக்கப்படும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பிரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்குத் தயாராக உள்ளதுடன், இடர் பாதுகாப்பில் நாட்டின் முதல் தேர்வாக உள்ளது.

7 News Pulse

Recent Posts

First Capital leads Sri Lanka’s Investment Banking Sector at CA Sri Lanka 60th Anniversary TAGS Awards 2025

First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a leading investment institution…

4 hours ago

இலங்கையில் கால்பதிக்கும் Fracspace நிறுவனம்: கொழும்பில் பிரம்மாண்டமாக அறிமுகமாகும் ‘Altaira’ சொகுசு குடியிருப்புத் திட்டம்

Fracspace நிறுவனம் தனது மைல்கல் திட்டமான 'Altaira' எனும், மலைப்பகுதியில் அமைந்த, அதிசொகுசு குடியிருப்புத் திட்டத்தை 2026 பெப்ரவரி 14ஆம்…

4 hours ago

மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராடஇணைகிறது MAS Femography மற்றும் Selyn Foundation

பெண்களுக்கான ஆடைத் தீர்வுகளில் (FemTech apparel) உலகளாவிய முன்னணியில் திகழும் MAS Femography, இலங்கையின் Selyn அறக்கட்டளையுடன் இணைந்து, மாதவிடாய்…

4 hours ago

இலங்கையின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதில் மூன்று தசாப்த பயணத்தை கொண்டாடும் Technomedics

இலங்கையின் மிகவும் நம்பகமான மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Technomedics, நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஆற்றி வரும் 30 ஆண்டுகால…

16 hours ago

Janashakthi Life Wins Gold at TAGS Awards 2026 organized by CA Sri Lanka, Benchmarking excellence in financial reporting

Received recognition for excellence in Corporate Governance Disclosure in the Financial Services category Janashakthi Life,…

16 hours ago