Categories: Local

மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (மார்ச் 11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றிலே இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் ரி.பகீரதன் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர் என்.கருணாகரன் ஆகியோர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது மாமாங்கம் பொது சுகாதார பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு இருதயபுரம் பொது சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, உணவு உற்பத்திகளுக்காக பயன்படுத்தக்கூடிய புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும், பாவனைக்குதவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

7 News Pulse

Recent Posts

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில்…

5 hours ago

நைஜீரியா கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள்…

5 hours ago

மே தினத்திற்காக விசேட போக்குவரத்து திட்டம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து…

5 hours ago

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மஞ்சள் தொகை பறிமுதல்

இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற…

5 hours ago

இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார…

5 hours ago

250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை – NO சம்பல் NO புட்டு NO ரொட்டி

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான…

17 hours ago