மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி பொலிசார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில்…
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள்…
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து…
இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற…
6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார…
நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான…