நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் தெரிவித்து மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) அறிவித்துள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ‘நியாயமான செலவுத் தொகை’ என்ற கொள்கையை சரியாக பின்பற்றியிருந்தால், இந்த உயர்வு சாத்தியமே இல்லை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவை எங்களது சங்கம் வலுவாக எதிர்க்கிறது. எதிர்வரும் நாட்களில் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
“மின்சார சபை (CEB) களவாடப்பட்ட, தவறான தரவுகளை பயன்படுத்தி அதிக செலவுகளை சுட்டிக்காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயன்றது.மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு நாட்டின் நலனுக்கோ, மக்களின் நலனுக்கோ அல்ல எனவும் இது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தால் எடுக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, மின்சார கட்டணத்தை 33% குறைக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் கூட வழங்கக்கூடிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…
First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…