Categories: LocalPoliticsWORLD

மியன்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.

அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார் தூதுவர் நன்றி தெரிவித்தார்.

அதேபோல் நெருக்கடியான நேரத்தில் நிவாரணக் குழு மற்றும் சுகாதார பணிக்குழுவை அனுப்பி வைத்தமைக்காகவும் நன்றி தெரிவித்த தூதுவர், இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நீண்டகால மத மற்றும் கலாச்சார நட்புறவு இதன் காரணமாக மேலும் வலுவடையும் என்றும் கூறினார்.

நிலநடுக்கத்தின் பின்னர் மியன்மாரின் தற்போதைய நிலைமை குறித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு தூதுவர் விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ் மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, மியன்மார் தூதரக அதிகாரிகளான Winh Wint Khaus Tun, Lei Yi Win உள்ளிட்டோரும் இதன்போது கலந்து கொண்டனர்.

Punitha Priya

Recent Posts

“Every Child Can” – CAL Children Triumph at Iron Kids Colombo 2026

As Child Action Lanka (CAL) marks its 20th Anniversary under the theme “Every Child Can,”…

1 hour ago

Why Natural Ceramides Are Becoming Essential in Baby Skincare

The instinct to protect your baby begins with the smallest rituals. A warm bath. A…

1 hour ago

Synogen Launches Sri Lanka’s First Comprehensive EV Charging Hub at Independence Arcade

Colombo, Sri Lanka – (25th Feb 2026) – In a landmark moment for Sri Lanka’s…

1 hour ago

Altair Showrooms: Strategically Chosen by the World’s Leading Automotive Brands

Altair’s prominence on Colombo’s skyline is now mirrored at street level. A growing number of…

12 hours ago

Siyapatha Finance Continues Mission to Conserve Sri PadaReserve

In an effort towards the sustainable conservation and preservation of Sri Pada Reserve, one of…

12 hours ago

HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

இலங்கையின் தனியார்துறை வங்கியியல்துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரணவீதி, பண்டாரகம…

12 hours ago