Categories: Business

ரொட்டரியின் மாயாஜாலம் – நம்பிக்கை, செயற்பாடு, மாற்றத்தை முன்னெடுத்த ஒரு பயணம்.

இலங்கை மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய ரொட்டரி மாவட்டம் 3220 கழகமானது, ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த ரொட்டரி வருட நிகழ்வை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய முயற்சியாகளைக் கொண்ட ‘Magic of Rotary’ (ரொட்டரியின் மாயாஜாலம்) திட்டமானது இலங்கையின் பல்வேறு சமூகங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ரொட்டரி கழகத்தின் ஏழு முக்கிய குறிக்கோள்களுடனும் ஒத்துழைப்பு, சேவை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு, கழகம் ஆறு முக்கிய திட்டங்களை செயற்படுத்தியது.  

13% உறுப்பினர் அதிகரிப்பு மற்றும் 5 புதிய கிளைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இவ்வருடமானது வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்தியது. ரொட்டரியின் தாக்கமானது இலங்கை மற்றும் மாலைதீவில் விரிவடைந்துள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.

மாவட்டத்தின் பல்வேறு சாதனைகளில், இந்த ஆண்டில் புதிய நிகழ்வுகளும் இடம்பெற்றன. முதல் முறையாக, ரொட்டரி உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியா பயணித்து, முன்னோடியான வணிக ஒப்பந்தங்களுக்கான சந்திப்பு பயணத்தில் (Business Matchmaking Trip) கலந்து கொண்டது. இந்த முயற்சி, சர்வதேச உறவுகளை வலுப்படுத்தியதுடன், தொழில்முறை ஒத்துழைப்புகளுக்கான புதிய வழிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பிறவியிலேயே இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் உயிரைக் காக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ‘Rotary for Little Hearts’ திட்டம், ஆண்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக அமைந்தது. ரொட்டரி, ரொட்டரக்ட், இன்டரக்ட் கழகங்களின் பேராதரவின் மூலம், பல குழந்தைகள் உயிர்காக்கும் சிகிச்சைகளைப் பெற்றனர். மொத்தமாக ரூ. 200 மில்லியன் இலக்குடனான இத்திட்டமானது, 70% நிதி திரட்டப்படும் அளவிற்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

பாதிப்பை எதிர்நோக்குபவர்களை அடையாளம் காணும் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு உதவுவதற்கான சமூகங்களின் தயார் நிலையை முன்னேற்றமடையச் செய்வதற்காக, மனநலனுடன் தொடர்புடைய அக்கறைகள் அதிகரிக்கும் வகையில் Rotary for Healing Minds எனப்படும் திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள் ஊடாக பல்வேறு பயிற்சித் திட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன.

Rotary for Career Guidance எனும் தேசிய ரீதியிலான முயற்சி மூலம், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களை சந்தித்து, அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தொழில்துறையை தெரிவு செய்வதற்கான உதவிகள் முன்னெடுக்கப்பட்டது.

Rotary Means Business திட்டத்தின் கீழ், ரொட்டரி வலையமைப்பின் மூலம் நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்களை ஒன்றிணைத்து, பயனுள்ள வணிக உறவுகள் உருவாக்கப்பட்டது. இங்கு வழிகாட்டல் வாய்ப்புகள் வழங்கப்பட்டதோடு, அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையானது, தொடர்ச்சியாக முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகின்து. Rotary for the Environment திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கும் விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. Hayleys நிறுவனத்துடன் இணைந்து 30,000 மரங்கள் நடுகை செய்ததன் மூலமாக, நாட்டின் வனவள வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, Rotary for Ability திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை திட்டமிட்டு, நாட்டின் பணியாளர் படையில் அவர்களை உள்ளீர்த்து, சம வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒரு புதிய பாதைக்கான வழி ஏற்படுத்தப்பட்டது.

வருடத்தின் சாதனைகள் பற்றி, மாவட்ட ஆளுநர் சுஷேன ரணதுங்க தெரிவிக்கையில், “இந்த வருடம் ரொட்டரியின் வலிமை அதன் ஒற்றுமையில் தங்கியிருந்ததை எமக்கு காட்டியுள்ளது. எமது உறுப்பினர்கள், ரொட்டரக்டர்கள், இன்டரக்டர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் நாம் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்திய ரொட்டரி கழகத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கிய ‘Hope on Wheels’ திட்டம் மற்றும் ஒரே வருடத்தில் ரூ. 1 பில்லியனுக்கும் அதிக திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் இந்த குழுப் பணிச் செயல் மற்றும் நோக்கமுள்ள நடவடிக்கையின் சக்தியை எடுத்துக் காட்டலாம். ஒன்றிணைந்த நோக்கங்களை பொருத்தமானதாகவும் நீடித்த தாக்கங்களாக மாற்றும் ஆற்றலே Magic of Rotary (ரொட்டரியின் மாயாஜாலம்) ஆகும். ” என்றார்.

Healing Minds 800 students

ரொட்டரி என்பது வெறுமனே சமூக கழகம் அல்ல, அது 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒரு உலகளாவிய வலையமைப்பு என வலியுறுத்துவதன் மூலம், தலைமைத்திறன், சேவை, வணிக மேம்பாடு, தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வழங்கும் அமைப்பு என, ரொட்டரி மாவட்டம் 3220 ஆனது இந்த அமைப்பு குறித்த பொதுமக்கள் பார்வையை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றது. Rotary Means Business திட்டம், சேவை மனப்பான்மையுள்ள தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களை இணைத்து, வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டலுக்கான வாயில்களைத் திறந்து, புதிய வணிகச் சந்திப்புகளுக்கு வழிவகுத்தது.

தனிநபர்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்கள் இணைந்து செயற்பட்டு, வருடத்தின் இறுதி வரை இந்த செயற்பாடுகளின் வேகத்தை அதே வகையில் முன்னெடுக்குமாறு ரொட்டரி ஊக்குவிக்கிறது. தன்னலமற்ற சேவையை ஊக்குவித்து, ஒற்றுமையை வளர்த்து, உலகளாவிய வலையமைப்புடன் கூடிய வலுவான சாதனைப் பதிவுகளுடன், சாதகமான மாற்றத்தை உருவாக்க ரொட்டரி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒன்றிணையும் போது, நபர்களையும் சமூகங்களையும் மாற்றும் வல்லமையை ஏற்படுத்தலாம் என்பதை ரொட்டரியின் மாயாஜாலம் (Magic of Rotary) மீண்டுமொரு முறை நிரூபிக்கிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை தொடர்ச்சியாக அறிய:  Rotary Facebook Page
இணையத்தளம்: www.rotary.org 

Hope on Wheels Independance Square
7 News Pulse

Recent Posts

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும்…

2 weeks ago

1880இல் இருந்து நிலம், மக்கள் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் கன்னவெரெல்ல எஸ்டேட்

கன்னவெரெல்ல எஸ்டேட், 1880 இல் நிறுவப்பட்டது, இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் தொடர்புடைய…

2 weeks ago

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO…

2 weeks ago

தனது முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Nimbus Ventures நிறுவனத்துடன் இணைந்து Ceylon Business Appliances வழங்கும் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு தேசிய அளவிலான…

3 weeks ago

Altair Issues Over 100+ Title Deeds Post Ownership Change

Altair Residences have, over the past six months, seen more than 100 individual title deeds…

3 weeks ago