யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல், அங்கு தனியாக இருந்த இளம் தாயையும் குழந்தையையும் அச்சுறுத்தி சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளது. பெண்ணின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு வந்த முதியவர்கள் மீது இக்கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் ஒரு முதியவரின் கை விரல் துண்டிக்கப்பட்டதுடன், மற்றுமொரு வயோதிப தம்பதியினர் முழங்காலிட வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த அட்டகாசத்தின் பின் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த முதியவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருகிலேயே பொலிஸ் மற்றும் கடற்படை காவலரண்கள் இருந்தும் இவ்வாறான வன்முறைகள் தொடர்வது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The Under-14 Inter-School Hockey Tournament organized by the Sri Lanka Schools Hockey Association was held…
As Child Action Lanka (CAL) marks its 20th Anniversary under the theme “Every Child Can,”…
The instinct to protect your baby begins with the smallest rituals. A warm bath. A…
Colombo, Sri Lanka – (25th Feb 2026) – In a landmark moment for Sri Lanka’s…
Altair’s prominence on Colombo’s skyline is now mirrored at street level. A growing number of…
In an effort towards the sustainable conservation and preservation of Sri Pada Reserve, one of…
View Comments
Xskthcm, gotta love the lottery! It's my little hope for the week to escape the grind. Anyone else playing tonight? Check out xskthcm for the results!