Categories: Local

வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (9) பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4821 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.   அவ்வாறன விபத்துகளுக்கு ஆளான சுமார் 60 சதவீதமானோர் அங்கவீனர்களாகியுள்ளனர்.

கவனயீனம், அவதனம் இன்மை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துதல் ஆகியன உங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்கு  பாதகமாக அமையலாம்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக தெரிவிப்பது அவசியம். 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சமூகப் பொறுப்பை உணர்ந்து சாரதிகள் வாகனம் செலுத்துவது அவசியம். கவனயீனமாக, மதுபோதையுடன் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் நிலவிவரும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு காலவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மீள புதுப்பித்துக் கொள்வதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு  சாரதிகளுக்கு விசேட நிவாரணக் காலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 25 ஆம் திகதி வரையான ஒருமாத காலப்பகுதியில் சாரதிகள், தமது சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது  என்றார்

gurueaswar

View Comments

  • Yo, what's the deal with hi365bet? Are the odds any good? I'm looking for a new spot to place some bets and wanna make sure it's worth my time. hi365bet

Recent Posts

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் உட்பட பலர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும்…

15 hours ago

இலங்கை சிறைச்சாலைத் துறை: ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த தீர்மானம்!

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும்…

16 hours ago

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய…

17 hours ago

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…

17 hours ago

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு…

17 hours ago

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that…

2 weeks ago