செலான் வங்கி 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்வருமான வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ.8,444 மில்லியனை பதிவு செய்தது. இது 2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்பதிவு செய்யப்பட்ட ரூ.7,331 மில்லியனிலிருந்து 15.18% வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த 6 மாதங்களுக்கு, செலான் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் ரூ.5,489 மில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ.4,558 மில்லியனுடன் ஒப்பிடும்போது 20.41% வளர்ச்சியாகும்.
நிதி செயல்திறன் அறிக்கை
2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 6 மாதங்களில் நிகர வட்டி வருமானம் ரூ.18,590 மில்லியனில் இருந்து ரூ.17,762 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது முன்னைய ஆண்டை விட 4.45% குறைவாகும். இது சந்தை வட்டி விகிதங்களில் ஏற்பட்ட குறைப்பு மற்றும் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளை மறுமதிப்பீடு செய்ததன் காரணமாக ஏற்பட்டது. வங்கியின் நிகர வட்டி மிகை (NIM) 2024இன் 4.90%இலிருந்து 2025இன் முதல் அரையாண்டில் 4.52% ஆக குறைவாகப் பதிவு செய்தது. 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் ரூ.3,739 மில்லியனில் இருந்து ரூ.4,316 மில்லியனாக அதிகரித்து 15.43% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக அட்டைகள், பணம் அனுப்புதல், வர்த்தகம் மற்றும் பிற நிதிச் சேவைகளிலிருந்து வரும் கட்டண வருமானம் காரணிகளாக அமைந்தது.
வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 23,114 மில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ. 23,279 மில்லியனுடன் ஒப்பிடும்போது 0.71% குறைவாகும். இந்த காலகட்டத்தில் நிகர வட்டி மிகைகளில் ஏற்பட்ட குறைவு இதற்கு பங்களித்தது.
வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நிகர இலாபங்கள் மற்றும் நிகர ஏனைய தொழிற்பாட்டு வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிற வருமான தலைப்புகள், 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அதிகரிப்பை பிரதிபலித்தன.
2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 6 மாதங்களுக்கு மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 2024இன் ரூ.10,388 மில்லியனில் இருந்து 2025இல் ரூ.11,258 மில்லியனாக 8.37% அதிகரித்து பதிவாகியுள்ளன. பணியாளர்களுக்கான செலவுகளின் அதிகரிப்பு காரணமாக, ஆளணிச் செலவுகள் ரூ. 5,372 மில்லியனில் இருந்து ரூ.5,801 மில்லியனாக 7.99%ஆல் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள் மற்றும் பெறுமானத் தேய்வு மற்றும் பெறுமானக் குறைப்புச் செலவீனங்களும் 8.78%ஆல் அதிகரித்துள்ளன. பல்வேறு செலவு கட்டுப்பாட்டு முயற்சிகள் மூலம் செலவுகளை குறைக்க வங்கி தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்ரூ.2,956 மில்லியனாக பதிவான வங்கியின் மதிப்பிறக்க கட்டணத்தை விட 83.39% குறைப்புடன் 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்ரூ.491 மில்லியனாக வங்கி மதிப்பிறக்க கட்டணத்தை பதிவு செய்துள்ளது. நிதிநிலை அறிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளின் போதுமான தன்மையை உறுதி செய்வதற்காக, உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் கடன் ஆபத்து விவரக்குறிப்பு மற்றும் வங்கியின் கடன் பிரிவின் கடன் தரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் மதிப்பிறக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதை வங்கி உறுதி செய்துள்ளது. வங்கியின் சொத்துக்களின் தர விகித மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் 1.76% (2024 – 2.10%) ஆக இருந்த அதே நேரத்தில் நிலை 3 வழங்கல் காப்பு விகிதம் 30/06/2025 நிலவரப்படி 81.82% ஆக வலுவானதாக இருந்தது. இது வங்கித் துறையில் மிக உயர்வான பதிவுகளில் ஒன்றாகும்.
வருமான வரிச் செலவுகள் ரூ.2,956 மில்லியனாகப் பதிவாகியுள்ளன. இது ஒப்பீட்டுக் காலத்தில் ரூ.2,773 மில்லியனாக இருந்ததுடன் ஒப்பிடும்போது 6.59% அதிகரிப்பாகும். நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி 2025இல் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.2,286 மில்லியனில் இருந்து ரூ.2,564 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது இதே காலகட்டத்தை விட 12.15% அதிகமாகும். 2025ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களுக்கு சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி ரூ.318 மில்லியனில் இருந்து ரூ.356 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது தொடர்புடைய காலகட்டத்தை விட 12.15% அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கி ரூ.5,489 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தை (PAT) பதிவு செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20.41% வளர்ச்சியாகும்.
நிதி நிலைமைக் கூற்று
கடந்த ஆறு மாதங்களில் நிலையான வளர்ச்சியைக் காட்டும் வகையில் 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ.780 பில்லியனில் இருந்து ரூ.812 பில்லியனாக அதிகரித்தது. வங்கி தனது தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை தக்க வைத்துக் கொண்டு, புதிய வங்கிக் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ.494 பில்லியனாகவும், நிகர வளர்ச்சி ரூ.31 பில்லியனாகவும், வைப்புத்தொகைகள் ரூ.670 பில்லியனாகவும், நிகர வளர்ச்சி ரூ.23 பில்லியனாகவும் பதிவாகியுள்ளன. வங்கியின் CASA விகிதம் 30%இல் பராமரிக்கப்பட்டது.
முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள்
செலான் வங்கி பிஎல்சியின் முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள் 2025 ஜூன் 30 நிலவரப்படி நல்ல நிலையில் இருந்தன. மூலதன போதுமான விகிதங்கள் ஒழுங்குமுறை குறைந்தபட்ச தேவைகளை விட மிக அதிகமாக இருந்ததுடன் பொது உரிமையாண்மை படி 1 மூலதன விகிதம் மற்றும் மொத்த படி 1 மூலதன விகிதம் 13.14% ஆகவும் மொத்த மூலதன விகிதம் 16.85% ஆகவும் பதிவு செய்யப்பட்டன.
வங்கி சட்டரீதியான தேவையை விட அதிகமாக திரவத்தன்மை காப்பு விகிதத்தை (LCR) பராமரித்தது. அனைத்து நாணய LCR விகிதமும் ரூபாய் LCR விகிதமும் முறையே 295.22% மற்றும் 306.44% ஆக பராமரிக்கப்பட்டன.
வங்கியின் சொத்துக்களின் தர விகித மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் மற்றும் மதிப்பிறக்க (நிலை 3) வழங்கல் காப்பு விகிதம் ஆகியன முறையே 1.76% (2024 – 2.10%) மற்றும் 81.82% (2024 – 80.90%) ஆக இருந்தன.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 15.29% (2024 – 15.35%) ஆகவும், சராசரி சொத்துக்களின் மீதான வருவாய் (வரிக்கு முன்னரான இலாபம்) 2.15% (2024 – 2.14%) ஆகவும் இருந்து முன்னேற்றத்தைப் பதிவு செய்தது.
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்வங்கியின் பங்கு ஒன்றின் இலாபம் ரூ.8.63 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் முதல் அரையாண்டில்ரூ.7.17 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜூன் 30, 2025 அன்று வங்கியின் ஒரு பங்கிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ.118.73 ஆக இருந்தது (குழு ரூ.121.99).
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கி 19 “செலான் பகசர நூலகங்களை” திறந்து மொத்த நூலகங்களின் எண்ணிக்கையை 284 ஆக உயர்த்தியது. இது நாடு முழுவதும் சிறுவர்களின் கல்வியை வளர்ப்பதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்குமான வங்கியின் உறுதிப்பாட்டை தெளிவாகக் குறிக்கிறது.
ஜூலை 9, 2025 அன்று, வங்கி ரூ.15 பில்லியன் மதிப்புள்ள Basel III இணக்கமான, அடுக்கு 2, பட்டியலிடப்பட்ட, தரப்படுத்தப்பட்ட, பிணையற்ற, கீழ்நிலைப்படுத்தப்பட்ட, மீட்கத்தக்க 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் தொகுத்திக்கடன்களை வெற்றிகரமாக திரட்டியது. அவை தொடக்க நாளிலேயே அதிகளவு திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 21, 2025 அன்று, Fitch மதிப்பீடுகள் செலான் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிலையான கண்ணோட்டத்துடன் இரண்டு புள்ளிகளால் உயர்த்தி ‘A+(lka)’ ஆக மேம்படுத்தியுள்ளன.
இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…
Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…
Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…
Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…
1st October 2025, Colombo: SOS Children’s Villages Sri Lanka marked World Children’s Day with the…