இலங்கையின் புகழ்பெற்ற திறந்தவெளி கலை கண்காட்சியான 2025 கலா பொல, கொழும்பு 07, ஆனந்த குமாரசாமி மாவத்தையில் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இது கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.
ஜோர்ஜ் கீத் அறக்கட்டளைக்கும் ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பாக விளங்கும் 2025 கலா பொல கண்காட்சி, 394 பதிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் தங்கள் படைப்புகளை கொள்வனவாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், கலை மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தினர். அவர்கள் பெப்ரவரி வெப்பத்திற்கு மத்தியில் இடம்பெற்ற இந்த தெருக் கலை கண்காட்சியின், தனித்துவமான மூழ்கும் கலைச் சூழலை இங்கு அனுபவித்தனர்.
இந்நிகழ்வானது சுமார் ரூ. 54 மில்லியன் எனும் மதிப்பிடப்பட்ட விற்பனையை ஈட்டியது. இதன் மூலம் நாட்டின் காட்சிக் கலை சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக அதன் பங்கை மேலும் உறுதிப்படுத்தியது.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரை ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையின் தலைவர் மாலக தல்வத்த மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர மற்றும் குழுமத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் வரவேற்றனர்.
இந்த உத்தியோகபூர்வ விழாவில் உரையாற்றிய மாலக தல்வத்த தெரிவிக்கையில், “சுமார் மூன்று தசாப்தங்களாக, இலங்கை கலைஞர்கள் செழித்து வளர்வதற்கான ஒரு முக்கிய தளத்தை கலா பொல வழங்கியுள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உறுதியான ஆதரவுக்கு இதற்காக எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் நுகர்வோருடன் தொடர்பைப் பெறவுமான ஒரு விசேட வாய்ப்பாக எப்போதும் இருந்து வருகின்றது.” என்றார். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையின் பிரதித் தலைவருமான மறைந்த தேசமான்ய கென் பாலேந்திராவை கௌரவிக்கும் வகையில், அடுத்த கலா பொல நிகழ்விலிருந்து, “வளர்ந்து வரும் கலா பொல கலைஞர்” எனும் வருடாந்த விருது வழங்கப்படும் என்றும் தல்வத்த இதன்போது அறிவித்தார்..
விழாவின் பிரதம விருந்தினரான, இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் தெரிவிக்கையில், “இந்த விழாவானது, (கலா பொல) இலங்கையில் பல கலைஞர்களின் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்துள்ளது என்பதை என்னால் அறிய முடிகின்றது. இது போன்ற ஒரு தளம் இல்லாமல் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினமாகும். எனவே இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். காரணம், நீங்கள் இங்கு பல கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கியுள்ளீர்கள்.” என்றார்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவின் தலைவர் கர்மெலின் ஜயசூரிய, இலங்கை கலை மற்றும் கலாசாரத்தை ஆதரிப்பதற்கான குழுமத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுகையில், “2025 கலா பொல நிகழ்வானது, வரலாற்றில் மிக அதிக கலைஞர்களின் பங்கேற்பைப் பதிவு செய்தது. அது சுமார் 400 பங்கேற்பாளர்களை எட்டியது என்பதைக் குறிப்பிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், படைப்பாற்றல் வெளிப்பாடு மற்றும் சமூக உரையாடலை ஊக்குவிப்பதற்கும், இலங்கையின் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்குமான எமது முயற்சிகளில் கலா பொல ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. Sri Lankan Art Gallery ஒன்லைன் தளம் போன்ற துணை முயற்சிகள் மூலம், கலைஞர்கள் வருடம் முழுவதும் வெளிப்படுத்தப்படுகின்ற மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை அணுகுவதை உறுதி செய்யும் விடயங்களில் நாம் உறுதியாக உள்ளோம்.” என்றார்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உற்சாகம் மிக்க உதவியுடன், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் உறுதியான செயற்படுத்தல் முயற்சிகளுடன், இலங்கையின் வளமான கலாசாரத்தையும், கலைகள் மற்றும் அது சார்ந்த சமூகத்தினரையும், கலா பொல தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. இலங்கை கலைஞர்களுக்கு, குறிப்பாக வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு, தொடர்ச்சியான நம்பிக்கையின் ஒளியாக இந்த விழா பிரகாசிக்கிறது. அவர்களின் படைப்புகளையும், மிக முக்கியமாக, நீண்டகால பொருளாதார நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துவற்கான ஒரு தனித்துவமான தளத்தை அது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை பற்றி
John Keells Holdings PLC (JKH) இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ‘சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை’ எனும் பிரிவின் கீழ் கலை மற்றும் கலாசாரம் இணைகிறது. ஜோன் கீல்ஸ் நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வேறுபட்ட தொழில் துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 15,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, கடந்த 19 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் ‘பெருநிறுவன அறிக்கை மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’ எனும் தரப்படுத்தலில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழுமையான அங்கத்துவம் கொண்ட உறுப்பினராகவும், UN Global Compact இல் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக உள்ள ‘Plasticcycle’ எனும் சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும் “நாளைய தேசத்தை ஊக்குவித்தல்” எனும் அதன் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான தூரநோக்கை JKH முன்னெடுத்து வருகிறது.
ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை பற்றி
1980 கள் முதல் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் மறுமலர்ச்சிக்காகவும் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதோடு, கண்காட்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அதனை முன்னெடுத்து வருகிறது. வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பரந்த பார்வையாளர்களுக்கு வழங்கவும், அதனை அவர்கள் கண்டறியவும் வாய்ப்பளிக்கிறது. இந்த அறக்கட்டளையானது, 1991 முதல் நாற்பது வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கான Young Contemporaries போன்ற பல முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. சிற்பம் மற்றும் ஓவியம், தற்போது Sri Lankan Art எனப் பெயரிடப்பட்டுள்ள சிரேஷ்ட கலைஞர்களை உள்ளடக்கிய இந்நிகழ்வு 1991 முதல் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகிறது. கலா பொல என்பது 1993 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திறந்தவெளி கலைக் கண்காட்சியாகும். அதன் பின்னர் 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளைத் தவிர வருடாந்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 1994 இல் ஆரம்பிக்கப்பட்ட நவ கலாகருவோ நிகழ்வு, பெயர்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களின் புதிய மற்றும் வளர்ந்து வரும் கலைகளுக்கு இடமளிக்கும் ஒரு வருடாந்த கண்காட்சியாகும். ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையானது, நூற்றுக்கணக்கான விளக்கக்காட்சிகள், இலங்கை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சிகள், கலைஞர்களின் குழுக்களின் கண்காட்சிகள், விவேட ஓவியர்களின் ஒரு மாத கால கண்காட்சிகள், இலங்கை மற்றும் வெளிநாட்டு ஓவியர்களின் தனிப்பட்ட கண்காட்சிகள் மற்றும் சார்க் ஓவியர்களின் கண்காட்சிகளையும் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…
Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…
Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…
Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…
1st October 2025, Colombo: SOS Children’s Villages Sri Lanka marked World Children’s Day with the…