இலங்கையின் முதல்தர பொதுக் காப்புறுதிதாரரான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL) அண்மையில் SLICGL Digital செயலியை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அறுபது வருடங்களுக்கு மேலாக நிரூபிக்கப்பட்ட SLICGL நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நவீன டிஜிட்டல் அனுபவத்துடன் இணைத்து வழங்குகிறது. SLICGL Digital செயலின் ஊடாக மோட்டார் காப்புறுதி சேவைகள் இப்போது உண்மையிலேயே வாடிக்கையாளர்களின் விரல் நுனியில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையடக்கத் தொலைபேசித் தளத்தின் ஊடாக காப்புறுதி திட்டம் பற்றிய தகவல்கள், இழப்பீட்டுக் கோரிக்கைகளின் தற்போதைய…
51 சக்திபீடங்களில் முதன்மையான திருகோணமலை ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
தெட்சண கைலாயம் எனப்படுவதும் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரர் வீற்றிருக்கும் திருகோணமலையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி , சக்தி பீடங்களில் முதன்மையானதும் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சித்திரை மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் 10.00 மணிக்கு திருவிழா இடம்பெற்று பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம், 3.30 மணிக்கு மூலஸ்தான பூஜை, மாலை 4.15 மணிக்கு தம்பபூஜை, மாலை 5.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை, 6.00 மணிக்கு திருவிழா இடம்பெற்று 7.30 மணிக்கு நிறைவு பெறும்.
01.04.2025 – முதலாம் திருவிழா – காராம்பசு வாகனம்
02.04.2025 – இரண்டாம் திருவிழா – மகர வாகனம்
03.04.2025 – மூன்றாம் திருவிழா – சர்ப்ப வாகனம்
04.04.2025 – நான்காம் திருவிழா – அன்ன வாகனம்
05.04.2025 – ஐந்தாம் திருவிழா – மஞ்சம்
06.04.2025 – ஆறாம் திருவிழா – கைலாக வாகனம்
07.04.2025 – ஏழாம் திருவிழா – சிம்ம வாகனம்
08.04.2025 – எட்டாம் திருவிழா – குதிரை வாகனம்
09.04.2025 – ஒன்பதாம் திருவிழா – சப்பறத்திருவிழா
10.04.2025 – தேர் திருவிழா
11.04.2025 – தீர்த்தோற்ஸவம்
12.04.2025 – பூங்காவனம் இடம்பெற திருவுளம் பெற்றுள்ளது.