விடியலை ரசிக்க ஹோட்டல் கதவை திறந்தவருக்கு ஹாய் சொன்ன ராஜநாகம்

விடுமுறையை உற்சாமாக கழிக்க ஹோட்டலுக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் நபர் காலை விடிந்ததும் சூரிய வெளிச்சத்தை காண அறையின் ஜன்னலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்தார். ஒரு பெரிய பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து செல்வதை கண்டார். மேலும் அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.

இதுதொடர்பான வீடியோவை அவர், ‘தாய்லாந்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, என் கைகள் நடுங்குகின்றன. நான் இப்போதுதான் விழித்தெழுந்து ஹோட்டல் திரைச்சீலைகளைத் திறந்தேன், இதோ பாருங்க, கதவுக்கு வெளியே ஒரு பெரிய பாம்பு இருக்கு, அந்தப் புதருக்குள் இன்னொன்று… அங்கே இன்னொன்று இருக்கு… இனி ஒருபோதும் வெளியே செல்ல மாட்டேன் என்று அவர் கூறினார்.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர். முதலில் அந்த பாம்பு ராஜநாக இனத்தை சேர்ந்தது என்பதை உறுதி பட கூறிய பயனர்கள், அறை கழிப்பறை மற்றும் படுக்கையறையில் வேறு ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள் என்றும், அமைதியாக இருங்கள், ராஜ நாகப்பாம்புகளைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவை ஒன்றும் செய்யாது என்றும் அறிவுறுத்தினர்.

https://www.instagram.com/reel/DDgPkkwyhI9/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *