இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் படத்தின் நீளம் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.