இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
தென்னை பயிர்ச்செய்கை சபையின் விசேட வேலைத்திட்டம்

தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
முதல் கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்