இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
14 வது வருடமாகவும் தரம் 05 மாணவர்களுக்காக இலவசமாக விநியோகிக்கப்படும் முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு

கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தால் தொடர்ந்து 14 வது வருடமாகவும் தரம் 05 மாணவர்களுக்கான இலவசமாக விநியோகிக்கப்படும் முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் மிக சிறப்பாக கொழும்பு முகத்துவாரம் இந்து கல்லூரி மண்டபத்திலே இடம்பெற்றது.
பதினைந்து இலட்சம் ரூபா செலவில் அச்சிடப்பட்ட முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் கையளிக்கும் இந்நிகழ்வு
தலைவர் எஸ். சுரேஷ்குமார் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மன்ற போசகர்கள் மற்றும் நிர்வாக குழுவினர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
15 லட்சம் ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் 800 பாடசாலைகளுக்கு இன்று முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது






