COD
கொழும்பு, இலங்கை: ஜூன் 25, 2025
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment இணைந்து 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி “City of Dreams Sri Lanka”வின் பிரமாண்டமான திறப்பு விழா குறித்து பெருமையுடன் அறிவிக்கின்றன. இந்த நிகழ்வு, உலகத்தரம் வாய்ந்த கேசினோ, ஆடம்பரமான Nüwa ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் உள்ளிட்ட திட்டத்தின் இறுதிப் பகுதிகளின் நிறைவைக் குறிக்கிறது.
இந்த மைல்கல் கூட்டணி, தெற்காசியாவின் முதல் முழு ஒருங்கிணைந்த ரிசார்ட்டின் அறிமுகத்தையும், இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறைத் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தனியார் துறை முதலீட்டையும் குறிக்கிறது – இது 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு திட்டம், இது உலக சுற்றுலாப் வரைப்படத்தில் கொழும்பின் நிலையை மறுவரையறை செய்கிறது.
கொழும்பின் மையப்பகுதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த ரிசார்ட், உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல், உயர்தர சில்லறை வணிகம், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் அதிநவீன MICE (கூட்டங்கள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒரு ஆற்றல்மிக்க இலக்கில் ஒன்றிணைக்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
City of Dreams தனது புகழ்பெற்ற வர்த்தக நாமத்தை ஒரு துடிப்பான புதிய சந்தைக்கு விரிவுபடுத்துகையில், இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தையும் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் சுற்றுலாத் தேவையையும் இது பயன்படுத்துகிறது. ஆடம்பர விருந்தோம்பல் மற்றும் கேமிங்கில் உலகளாவிய நிபுணத்துவத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் சுற்றுலா சலுகைகளின் தரம் மற்றும் கவர்ச்சியை உயர்த்த இந்த ரிசார்ட் தயாராக உள்ளது. City of Dream Sri Lanka ஒரு ரிசார்ட்டை விட அதிகம் – இது ஒரு புதிய வாழ்க்கை முறை இயக்கத்தின் மையப்புள்ளியாகும், இங்கு நவீனத்துவம், நேர்த்தியானது மற்றும் உள்ளூர் கலாச்சாரம் இணைகின்றன. இந்த முக்கிய திட்டம் ஆடம்பரம், நிலைத்தன்மை மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான புதிய அளவுகோல்களை அமைத்து, பிராந்தியத்தின் சுற்றுலாப் பிம்பத்தை மறுவரையறை செய்கிறது.
தலைமைத்துவ கண்ணோட்டங்கள்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத் தலைவர் க்ரிஷான் பாலேந்திரா கருத்து தெரிவிக்கையில், “City of Dreams Sri Lanka ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கருத்தரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான திட்டமாகும். இது கொழும்பை, பிராந்தியத்தில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு விருப்பமான இடமாக, சிறந்த வாழ்க்கை முறை, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. City of Dreams Sri Lanka-வின் அறிமுகத்தில் அனைத்து அம்சங்களின் ஒருங்கிணைப்பும், தெற்காசியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியாக அதன் முழு திறனையும் வெளிப்படுத்தும் என்றும், இலங்கைக்கு சுற்றுலா தேவையை உருவாக்குவதிலும், அந்நிய செலாவணி வருவாயை ஈட்டுவதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
Melco Resorts & Entertainment நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான Lawrence Ho கூறுகையில், “இலங்கையில் இந்த மைல்கல் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதிலும், ஜோன் கீல்ஸுடன் கூட்டு சேர்ந்து இருப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கைக்கு மகத்தான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த வாய்ப்பு எங்கள் தற்போதுள்ள சொத்துக்களின் தொகுப்பிற்குப் பூர்த்தி செய்கிறது. City of Dreams Sri Lanka, பிற அதிகார வரம்புகளில் உள்ள ஒத்த ஒருங்கிணைந்த உல்லாச விடுதிகளால் அமைக்கப்பட்ட வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளிலிருந்து உத்வேகம் பெற்று, இலங்கையில் சுற்றுலாத் தேவையைத் தூண்டி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தார்.
John Keells தொடர்பில்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) என்பது கொழும்பு பங்குச் சந்தையில் சந்தை மூலதனமயமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வெவ்வேறு தொழில் துறைகளில் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது. 155 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேலும், LMD பத்திரிகையால் 19 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெருநிறுவன அறிக்கையிடல் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH, “நாளைக்காக தேசத்தை மேம்படுத்துதல்” என்ற தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.
Melco Resorts & Entertainment Limited தொடர்பாக
Nasdaq Global Select Market (Nasdaq: MLCO) அமெரிக்க டெபாசிடரி பங்குகளை பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ஒருங்கிணைந்த Resort வசதிகளை உருவாக்கி, உரிமையாளராகவும், இயக்குநராகவும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது Macauவின் Cotai மற்றும் Taipa பகுதிகளில் முறையே அமைந்துள்ள ‘City of Dreams’ (www.cityofdreamsmacau.com) மற்றும் ‘Altira Macau’ (www.altiramacau.com) போன்ற ஒருங்கிணைந்த Resortsகளை இயக்குகிறது. மேலும், இந்நிறுவனம் Macauவின் Taipaவில் அமைந்துள்ள ‘Grand Dragon Casino’ மற்றும் Macauவின் மிகப்பெரிய Non-Casino அடிப்படையிலான எலக்ட்ரானிக் கேமிங் இயந்திரங்களை இயக்கும் ‘Mocha Clubs’ (www.mochaclubs.com) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. மேலும், Macauவின் Cotai பகுதியில் சினிமா தலைப்பைக் கொண்ட ‘Studio City’ (www.studiocity-macau.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐயும் இந்நிறுவனம் இயக்குகிறது. பிலிப்பைன்ஸில், மணிலாவின் Entertainment City Complexஇல் அமைந்துள்ள ‘City of Dreams Manila’ (www.cityofdreamsmanila.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐ இந்நிறுவனம் இயக்கி நிர்வகிக்கிறது. ஐரோப்பாவில், சைப்ரஸ் குடியரசின் லிமாசோலில் அமைந்துள்ள ‘ City of Dreams Mediterranean’ (www.cityofdreamsmed.com.cy) மற்றும் சைப்ரஸின் பிற நகரங்களில் உள்ள உரிமம் பெற்ற satellite casinos (“சைப்ரஸ் கேசினோக்கள்”) ஆகியவற்றையும் இந்நிறுவனம் இயக்குகிறது. நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.melco-resorts.com ஐப் பார்வையிடவும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் Hong Kong Exchangeஇன் மெயின் போர்டில் பட்டியலிடப்பட்டுள்ள Melco International Development Limited நிறுவனத்திற்கு சொந்தமானது. இதன் பெரும்பான்மை பங்குகளும் நிர்வாகமும் நிறுவனத்தின் தலைவர், நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லோரன்ஸ் ஹோவிற்கு சொந்தமானது.
இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ்…
With empowerment and patronage from Samaposha, the country's most popular breakfast cereal, the 'Samaposha Provincial…
இலங்கையின் மிகப் பிரபலமான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, மாற்றத்தின் அடையாளத்துடன் அதன் 32ஆவது…
Ministry of Digital Economy and SLT-MOBITEL pioneer national initiative Sri Lanka pioneers a new…
இலங்கையின் முன்னணி நீர்ப்பம்பி உற்பத்தியாளரும், புத்தாக்கமான நீர் முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் விளங்கும் Agromax நிறுவனம், 2025 ஆம்…
Fonterra Brands Lanka, in collaboration with the Tertiary and Vocational Education Commission (TVEC), the National…